மாமேதை மார்க்ஸ் -ம் எங்கெல்ஸ்-ம் கம்யூனிசக் கருத்தோட்டத்தை முன் வைத்த
போது அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்; வழக்குகள் பல அவர்கள் மீது
தொடுக்கப்பட்டன. அப்போது வெறும் இருவராக மட்டும் இருந்த அவர்கள் கூறினர்
"எங்கள் இருவரையும் கண்டு முதலாளித்துவ உலகம் அஞ்சுகிறது" என்று. அத்தகைய
வலிமை மிக்கதாக அவர்கள் முன்வைத்த தத்துவம் இருந்தது. பொருளாதாரம், வரலாறு,
கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக அலசி ஆராய்ந்த
விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அது விளங்கியது.
Showing posts with label மாற்றுக்கருத்து. Show all posts
Showing posts with label மாற்றுக்கருத்து. Show all posts
Wednesday, May 2, 2012
Saturday, January 14, 2012
ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டியவர் ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க ஊழல் முழக்கத்தை கையிலெடுக்கும் அத்வானி
திருடன்
ஒருவன் பலர் அவனை விரட்டும் போது ஒரு கட்டத்தில் விரட்டுபவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு
சேர்ந்து கொண்டு திருடன் திருடன் என்று அவனும் கூறிக்கொண்டு ஓடித் தப்பிக்கும் காட்சியை
அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நமது நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப்
பார்த்தால் அக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது.
பி.ஜே.பி.
கட்சியின் முக்கிய தலைவரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான திரு நரேந்திர
மோடி அமெரிக்கா செல்ல விரும்பிய போது அவருக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்தது.
அது மட்டுமல்ல அக்கட்சியின் மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி அவர்கள் லண்டன் சென்ற
போது அங்கு கடுமையான மக்களின் எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டிருந்தது. அப்போது அவர்
வெளிப்படையாகவே இந்தியாவில் அவரது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட சம்பவங்களுக்காக
மன்னிப்புக் கோரினார்.
Friday, January 13, 2012
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு
கூடங்குளம்
அணுமின் நிலையப் பிரச்னை தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. அதனை எதிர்த்த போராட்டம் எந்த வகையான எதிர்ப்பும் இன்றி அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம
மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அதற்கு ஆதரவு இயக்கம்
என்ற பெயரில் ஒரு இயக்கமும் சில மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது என்ற பெயரில் அணுமின் நிலையம் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கைக் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அணுஉலையை
எதிர்த்த போராட்டத்திற்கான ஆதரவு மேத்தா பட்கர், அருந்ததிராய் அது தவிர ஓய்வு பெற்ற
அணு விஞ்ஞானிகள் சிலர் போன்றோரிடமிருந்து முதலில் வந்தது. அப்போதெல்லாம் அணுஉலைக்கான
ஆதரவுக் குரல்கள் அந்த அணுமின் நிலையத்தைச் சேர்ந்த இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே
வந்து கொண்டிருந்தன. தற்போது அனைவராலும் அறியப்பட்ட விஞ்ஞானியும் நமது முன்னாள் குடியரசுத்
தலைவருமான அப்துல் கலாம் போன்றவர்களிடமிருந்தும் அணுஉலைக்கு ஆதரவான குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.
நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே...
மாபெரும் ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்ப்பியர் தனது நாடகம்
ஒன்றில் கூறினார் இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் வசிப்பவர் அனைவரும் நடிகர்கள் என்று.
அவர் ஒரு ஆழமான பொருளுடன் அந்தக் கருத்தைக் கூறினார். அதாவது நாடகங்களில் ஒவ்வொரு காட்சியும்
வேகம் வேகமாக மாறிக் கொண்டேயிருக்கும். அதைப்போல் தான் இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளும்
கூட. அவற்றில் முக்கியப் பங்காற்றும் மக்களும் நாடக நடிகர்கள் போல் காட்சிக்குக் காட்சி
மாறக்கூடியவர்களே என்று கூறினார்.
ஆனால் அவரது கூற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்துவார்த்த அம்சத்தை எடுத்துவிட்டு
இந்த உலகத்தை ஒரு நாடக மேடை என்று ஒரு மலிவான அர்த்தத்தில் அதாவது கூத்து மேடை என்று
பார்த்தால் அதற்கு என்ன பொருளுண்டோ அத்தகைய மேடையாக நமது இந்திய நாடு ஆகிக் கொண்டுள்ளது.
அதில் தேர்ந்த கதாபாத்திரங்களாக நமது அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் உள்ளனர்.
மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் காட்சி ஊடகக் கவுன்சில் பரிந்துரை குறித்த நமது பார்வை
இந்தியப் பத்திரிக்கைக் கவுன்சிலின் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற
நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில்
எழுத்து ஊடகங்களுக்கு எவ்வாறு பத்திரிக்கைக் கவுன்சில் உள்ளதோ அதுபோல் காட்சி ஊடகங்களுக்கும்
காட்சி ஊடகக் கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்; ஏனெனில் அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்குக்
குந்தகம் விளைவிக்கும் வகையில் பல செய்திகளைத் தருவனவாக ஆகிவிட்டன என்று கூறியுள்ளார்.
பொறியியல் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்
பொறியியல்
கல்வி பெற்றிருந்தும் வேலையின்றியும் கட்டுபடியான சம்பளமின்றியும் அல்லல்படும் தொழிலாளருக்கு
ஓர் அறைகூவல் - இஞ்னியரிங்
ஒர்க்கர்ஸ் யூனிட்டி சென்டர் சார்பாக
- தோழர் கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)
தங்களது
பிள்ளைகளைப் பொறியியல் கல்வி கற்றவர்களாக ஆக்கிய பெற்றோர் பூரித்திருந்த காலம் என்று
ஒன்று இருந்தது. பொறியியல் கல்வி வழங்கிவிட்டால் அப்பிள்ளைகள் குறித்துக் கவலைப்பட
ஏதுமில்லை; அவர்களின் எதிர்காலம் நிச்சயமானதாக ஆகிவிடும் என்று அவர்கள் கருதினர். ஆனால்
இன்று பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற மாணவர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.
போராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்
தொழிலாளர்
உரிமைக்குரல் வெளியில் வராவண்ணம் குரல்வளை நெறிபடும் சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரமாக
உருவாகி வளர்ந்துவரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்
நமது நாட்டின்
தொழிலாளர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் தற்போது நிலவுவது ஒரு இருண்டகாலமே. உலகமயம்
நிலவும் இன்றைய சூழலில் அந்நிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம்
என்ற பெயரில் விஷேசப் பொருளாதார மண்டலங்கள் என்று மண்டலங்களை அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன.
அவற்றிற்குப்
பல்வேறு விஷேசச் சலுகைகள் மற்றும் உரிமைகளையும் அரசு வழங்கிவருகிறது. இச்சூழலில்
தொழிலாளர் இயக்கங்கள் அரசால் நேரடியாகவும் அரசியல் கட்சிகளால் மறைமுகமாகவும் பெரிதும்
கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
|
94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்
|
இந்த ஆண்டு
நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற
அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.பியின் செயல்பாடுகள் தொடங்கி ஒருசில ஆண்டுகளே
ஆன நிலையில் தேனித் தோழர்கள் இப்பொதுக்கூட்ட ஏற்பாட்டினை பெருமகிழ்ச்சியுடனும் பெரும்
முயற்சியுடனும் மேற்கொண்டனர். தேனி வட்டாரப் பொதுமக்களும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத்
தேவையான நிதி உதவியினைத் தந்து பேருதவி புரிந்தனர்.
தேனி பேருந்து
நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகவதி அம்மன் கோவில் திடலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த
மேடையில் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின்
படங்கள் அலங்கரிக்க அக்கூட்டம் நடைபெற்றது.
|
தோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு:
உழைக்கும் வர்க்க அணிகளின் முன் நிறுத்தும் உயர்ந்த படிப்பினைகள்
கடந்த அக்டோபர் 30 அன்று ஹிந்து நாளிதழில் 5கால் யானை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறித்தது.
புரட்சி, சமூகமாற்றம் என்றெல்லாம் பலவாறு பேசும் எந்த அமைப்பினாலும் நினைவு கூரப்படாத வரலாறு அவருடையது. அவரது வரலாறு தொழிலாளருக்காகப் பாடுபட்ட ஒருவரின் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான வரலாறு மட்டுமல்ல. இந்திய முதலாளி வர்க்கம் எத்தனை கொடுமையானது, இந்திய அரசு எந்த வர்க்கத்தினுடையது என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்திய வரலாறும் ஆகும்.
Thursday, December 1, 2011
எழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு
மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும்
அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை
எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு
கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும்
படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய
காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக
விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு
வந்திருந்தார்.
Thursday, November 3, 2011
சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்
2007 மே மாத வெளியீடு
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.
“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச்
சண்டாளர்களின் ஆட்சியிலே.”
- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.
Thursday, July 21, 2011
சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி
கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.
சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி
கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.
சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் யூரி ககாரின்
யூரி ககாரின்: சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் விண்வெளியில் பறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன
இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியுடன் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதன் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கிய 50-வது ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு பயணித்த முதல் மனிதன் சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி ககாரின் ஆவார். உலகெங்கும் அந்த நாள் மனிதனின் மகத்தான சாதனை நாளாகப் பெரிதும் நினைவுகூரப் படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியுடன் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதன் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கிய 50-வது ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு பயணித்த முதல் மனிதன் சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி ககாரின் ஆவார். உலகெங்கும் அந்த நாள் மனிதனின் மகத்தான சாதனை நாளாகப் பெரிதும் நினைவுகூரப் படுகிறது.
Wednesday, July 20, 2011
தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்
தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.
தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?
தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார்.
சட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்
இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.
மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்
மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்
நாகர்கோவில்மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.
ஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்
70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வியங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.
அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?
அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)






