தமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
Showing posts with label 2011 மாற்றுக்கருத்து. Show all posts
Showing posts with label 2011 மாற்றுக்கருத்து. Show all posts
Thursday, April 21, 2011
கல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்
அறிவைப் பெறுவது உரிமையாக முடியுமே தவிர; அதனை அரைகுறையாகப் பெற விரும்புவது உரிமையாகாது
நமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.
நமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.
தில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள்விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை
தேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமயநல்லூரில் பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்
தியாகி பகத்சிங்கின் 80-வது நினைவு தினம் சி.டபிள்யு.பி. அமைப்பின் சார்பாக இந்த ஆண்டு மார்ச் - 23 அன்று சமயநல்லூர், ஆலங்குளம், சிவகாசி, ஆனைக்கூட்டம் ஆகிய இடங்களில் தியாகிகள் ஸ்தூபி எழுப்பி அனுஷ்டிக்கப்பட்டது. ஆலங்குளத்தில் மார்ச் - 23 அன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தோழர் த.சிவக்குமார் (சி.டபிள்யு.பியின் மத்தியக் குழு உறுப்பினர்) சிறப்புரை ஆற்றினார்.
கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்
நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.
Wednesday, April 20, 2011
இன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல
இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.
Monday, February 28, 2011
ஒரு பொதுத்துறை நிறுவனம் கொள்ளை போவதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் அரசியல் சந்தர்ப்பவாதம்
ஒரு நாட்டின் தொழில்கள் தேசியமயமாக்கப் படுவதற்கும், சமூக மயமாக்கப்படுவதற்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது சில தொழில்கள் தேசிய மயமாக்கப் பட்டவையாகவே உள்ளன. அவ்வாறு சில தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டு அரசுத் துறையில் இருப்பது அரசாங்கங்களுக்கு அவசியமாகவும் உள்ளது.
மார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்
மாமேதை லெனின் கூறினார்: நடைமுறை இல்லாத தத்துவம் வறட்டுத் தத்துவம்; தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டு நடைமுறை என்று. தத்துவத்தை அது பகட்டாகத் தங்கியிருந்த தந்த மாளிகையிலிருந்து விடுவித்து இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தை நடைமுறைகளோடு பொருத்திக் காட்ட மட்டுமே செய்தன; ஆனால் தேவை என்னவென்றால் அதனை மாற்றுவதே எனக் கூறிய மாமேதை மார்க்ஸின் கருத்தை ரஷ்யப் புரட்சியின் மூலம் நிரூபித்ததோடு தத்துவம் நடைமுறை ஆகிய இரு அம்சங்களின் உருவகங்களாகவும் விளங்கியவர்களே மாமேதைகள் லெனினும், ஸ்டாலினும் ஆவர்.
சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு


கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.
மூடிக்கிடந்த கண்களைத் திறந்த விக்கி லீக்கும் ராடியா டேப்பும்

அம்பலப்படுத்தும் முதலாளித்துவ அவலங்கள்
சமீபத்தில் டெல்லியில் நடந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதாவது ஒரு கணவன் தனது மனைவியைக் கொன்று அவளது உடலைக் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி ஒன்றைக் கடையில் வாங்கி அதில் பல தினங்கள் வைத்திருந்தான் என்பதே அச்செய்தி. இருந்தாலும் கூட அப்பெட்டியிலிருந்தும் துர்நாற்றம் கிளம்புவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை வைத்தே அவனைக் கைது செய்து விட்டார்கள்.
ஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு

பணம் கொடுத்துப் பெறும் தேர்தல் வெற்றி மூலம் அதைச் சந்திக்கத் தயாராகும்
ஆளும் கட்சியும் அதனை எதிர்கொள்ள வழி தெரியாது திணறும் எதிர்க் கட்சியும்
2010ம் ஆண்டு ஊழல், மோசடிகளின் ஆண்டு என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. அத்தனை ஊழல்கள் இந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. காமன் வெல்த் விளையாட்டு மைதானம் அமைப்பதில் ஊழல், இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி முறைகேடாக ஒதுக்கீடுகள் செய்ததில் ஊழல், தனது உறவினர்களுக்கு முறைகேடாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியதில் கர்நாடகாவின் எடியூரப்பா செய்துள்ள ஊழல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வீடுகளை மந்திரிகளின் சொந்தக்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒதுக்கி தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் செய்துள்ள ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிதர்சனமாகிவிட்ட நிலை நிலவுவதால் இந்த ஆண்டையே ஊழல், மோசடிகள் நிறைந்த ஆண்டாக ஊடகங்கள் வர்ணிப்பதில் தவறேதுமில்லை.
பிப்ரவரி 27 தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்

இந்திய மண்ணின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்
அவரது உன்னத வாழ்க்கையை நினைவு கூர்கிறது மாற்றுக்கருத்து
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்களது அளப்பரிய தியாகங்களால் மின்னும் நட்சத்திரங்களாக விளங்கியவர் பலர் இருந்தனர். அவர்களில் சிலரது தியாகங்கள் யாராலும் மறைக்கவியலாதவாறு பிரபலம் பெற்றன. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் தூக்கிலிடுதல் போன்ற கொடூர நடவடிக்கைகளால் அத்தகைய பிரபலத் தன்மை அவர்களது வரலாற்றிற்குக் கிட்டியது. அந்த ஒளிப் பிரவாகத்தில் கூசிப் போன கண்களுக்கு அதையொத்த பல தியாக வரலாறுகள் அவ்வளவு தூரம் புலப்படாது போய்விட்டன. அத்தகைய மகத்தான மறைக்கப்பட்ட தியாக வரலாறுகளில் ஒன்றுதான் தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் வரலாறாகும்.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செயல்பட்ட ஹிந்துஸ்தான் சோலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி என்ற அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக விளங்கியவர் சந்திர சேகர் ஆசாத் ஆவார். தனது 15,ஆவது வயதில் அதாவது பள்ளிப் பருவத்திலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்ட சந்திர சேகர் சீத்தாராம் திவாரி, நீதிமன்ற விசாரணையின் போது தனது இயற்பெயரைத் துறந்து தனக்குத் தானே ஆசாத் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். விடுதலை என்ற பொருள் கொண்ட அப்பெயரை உச்சரித்ததற்காக வெள்ளை நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 சவுக்கடிகள் என்ற தண்டனையை ஒவ்வொரு அடி அவர் மேல் விழுந்த போதும் பாரத அன்னை வாழ்க! என்ற முழக்கத்துடன் அதனை எதிர் கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் காந்தியடிகளால் இடையில் நிறுத்தப்பட்டது விடுதலைப் போரில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய பலரைப் பயங்கரவாத நடவடிக்கைகள் பக்கம் தள்ளியது. அவ்வாறு தள்ளப்பட்டவரில் ஆசாத்தும் ஒருவர்.
டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கார் திரைப்படம் - ஒரு திறனாய்வு

முழுக்க முழுக்கக் கற்பனை அடிப்படையில் எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அதாவது கற்பனைக் கதைகளை எழுதுபவருக்கும், திரைப்படமாக எடுப்பவருக்கும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதையைக் கையாள்பவருக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சுதந்திரம் உண்டு. அதாவது அவர் விரும்பினால் கதையை அவர் விரும்பும் விதத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.
Sunday, February 27, 2011
ராசாவின் பதவி விலகலும் கபில் சிபலின் பொறுப்பேற்பும் மன்மோகன் சிங் அரசால் ஊழலை மூடிமறைக்க அரங்கேற்றப்பட்டதொரு ஓரங்க நாடகம்

நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவதுபோல் அழு என்பது நமது ஆட்சியாளர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் நடத்த ஊழல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மூலம் வெளிவந்தவுடன் அதனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊடகங்கள் மூலமும் வந்த விமர்சனங்களின் விளைவாகத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா பதவி விலக நேர்ந்தது. அவர் வகித்த தொலைத் தொடர்பு அமைச்சகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
