Powered By Blogger

Friday, November 18, 2011

இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்


        (மாற்றுக்கருத்து  15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)  

இடதுசாரி ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே  வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன.  அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது, அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல.  தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும் கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில் வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வி­யங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.

Sunday, November 13, 2011

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவிட்ட முதலாளித்துவம்

                    2007 ,மே மாதத்தில் வெளியான கட்டுரை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங் தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

Monday, November 7, 2011

எஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்

2007 ,மே மாதத்தில் வெளியான கட்டுரை
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் தவறும் கேரள அரசின் செயல் குறித்து அறிக்கை ஒன்றை எஸ்.யு.சி-ஐ கட்சி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச தரம் வாய்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அணையின் உயரத்தைக் கூட்டுவது அல்லது வேறு அணை கட்டுவது போன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

Thursday, November 3, 2011

சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்

2007 மே மாத வெளியீடு
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.
“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச்
சண்டாளர்களின் ஆட்சியிலே.”
- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.

ஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்

2007 மே மாத வெளியீடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை. அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன. அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன. வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும்.

Thursday, July 21, 2011

சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.


சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் யூரி ககாரின்

யூரி ககாரின்: சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் விண்வெளியில் பறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன
இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியுடன் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதன் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கிய 50-வது ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு பயணித்த முதல் மனிதன் சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி ககாரின் ஆவார். உலகெங்கும் அந்த நாள் மனிதனின் மகத்தான சாதனை நாளாகப் பெரிதும் நினைவுகூரப் படுகிறது.


Wednesday, July 20, 2011

தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.


தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார்.

சட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்


இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்



நாகர்கோவில்
மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.


ஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்

70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.

அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?

அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

வானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு

“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”


“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”


“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”


இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.