Powered By Blogger

Thursday, April 21, 2011

தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்க ஆளும் கட்சியின் தோல்வியை உறுதி செய்வதே ஒரே வழி

தமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசிய - வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச்சி முன்னிறுத்தும் படிப்பினை

சமூக நெருக்கடிகள் கிளர்ச்சிகளை உருவாக்கும் சரியான இலக்கை நோக்கியவையாக அவை ஆக அமைப்பு அவசியம்மதவாதத்தில் மூழ்கி பல வகை பின்தங்கிய போக்குகளின் நிலைக்களனாக விளங்கியதும் உலக நாடுகளின் வளர்ச்சியோடு இணைந்து செல்லாமல் தனித்து விடப்பட்ட தீவுகள் போல் சமூக பொருளாதார கலாச்சார நிலைகளில் பெரும்பான்மை மக்களை வைத்திருந்தவையுமான பல மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் தோன்றி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாஸ்மின் புரட்சி என்ற பெயரிலான மக்கள் எழுச்சி சமீபகால வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நாடுகள் அனைத்திலும் மன்னராட்சி அல்லது ராணுவ ஆட்சிகளே இருந்தன. இந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்கட்தொகை 33.3 கோடி. அதில் 32.5 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சி இல்லை. அந்நாடுகளின் மிக முக்கிய இயற்கை வளம் எண்ணெய் ஆகும்.

நமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிமயமாதல் போக்கைக் கணக்கிலெடுத்து, உரிய வழிகாட்டுதல் வழங்கி வர்க்க விடுதலைச் சாதிக்கப் பாடுபட வேண்டும்


நமது நாட்டில் பட்டாளிமயமாதல் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சிறு உடமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு பட்டாளி வர்க்க அணிகளுடன் சேரும் போக்கு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மிகப் பெரிய வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பகாசுர வர்த்தக நிறுவனங்கள் சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அழித்தொழித்துக் கொண்டுள்ளன. அது பட்டாளி வர்க்க அணிகளுடன் உடைமை இழந்தவர்களை அணி சேர்த்துக் கொண்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத நிலை, இடுபொருள் விலை உயர்வு, உயர்ந்து வரும் உயர்கல்விச் செலவினங்கள் போன்றவை சிறிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோரைப் பொறுத்தவரை விவசாயத்தை முழுமையாக கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் குண்டுகுறுக்க நிலங்களை விற்றுவிட்டு விவசாயத் தொழிலாளராகவும் உதிரித் தொழிலாளராகவும் மாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பல இடங்களில் பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இப்போக்கை ஊக்குவிக்கும் விதத்தில் அரசு விவசாயத்திற்கு வழங்கிவந்த மானியத் தொகைகளை நிறுத்தி விவசாயத்தை இன்னும் கூட கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. இவற்றின் மூலம் ஏராளமானோர் ஆயிரக் கணக்கில் வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற கடைகளில் வேலை செய்யும் தொழிலாளராகவும் விவசாயப் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளராகவும் மாறியுள்ளனர்.

உலக அளவிலும் இந்தியாவிலும் தொழிலாளர் இயக்கங்கள் எதிர்கொண்டிருக்கும் பின்னடைவுகளும் அதற்கான காரணங்களும்

உலகின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் தொழிலாளரின் நடைமுறைப் பிரச்னைகளுக்காகவே பாடுபடும் தன்மையைக் கொண்டவையாகவே பல காலமாக உள்ளன. அமெரிக்காவில் ரொனால்டு ரீகனும் இங்கிலாந்தில் மார்க்ரட் தாச்சரும் அறிமுகம் செய்த புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்படும் வரை மேலை நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் ஊதியம் ஒரு சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கைத் தேவைகளை ஈடுகட்டும் அளவிற்கு இருந்தது. அதனால் தாங்கள் கூலி அடிமைகள் என்ற உணர்வோ அதனைத் தூக்கியயறிய சமுதாய மாற்றம் அவசியம் என்ற எண்ணமோ பரந்த அளவில் தொழிலாளருக்கும் அவர்களை வழிநடத்திய தொழிற்சங்கங்களுக்கும் இருக்கவில்லை.

தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்

அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுவது என்றிருந்த தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்
உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.


கல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்

அறிவைப் பெறுவது உரிமையாக முடியுமே தவிர; அதனை அரைகுறையாகப் பெற விரும்புவது உரிமையாகாது
நமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.

தில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள்விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை

தேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமயநல்லூரில் பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்


தியாகி பகத்சிங்கின் 80-வது நினைவு தினம் சி.டபிள்யு.பி. அமைப்பின் சார்பாக இந்த ஆண்டு மார்ச் - 23 அன்று சமயநல்லூர், ஆலங்குளம், சிவகாசி, ஆனைக்கூட்டம் ஆகிய இடங்களில் தியாகிகள் ஸ்தூபி எழுப்பி அனுஷ்டிக்கப்பட்டது. ஆலங்குளத்தில் மார்ச் - 23 அன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தோழர் த.சிவக்குமார் (சி.டபிள்யு.பியின் மத்தியக் குழு உறுப்பினர்) சிறப்புரை ஆற்றினார்.


கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.

Wednesday, April 20, 2011

கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.

தேனி நகரில் சி.டபிள்யு.பியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி) சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30.01.2011 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தோழர்கள் த.சிவக்குமார், சத்தியமூர்த்தி, வரதராஜ் ஆகியோர் உரையாற்றினர். சி.டபிள்யு.பி. அமைப்பின் தென்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

இன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல


இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.


Tuesday, April 19, 2011

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்

- தோழர் கு.கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)



108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.