Powered By Blogger

Monday, December 20, 2010

எஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை






மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்
தருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான்.

முதலாளித்துவ ஜப்பானும், முதலாளித்துவமாகி வரும் சீனாவும் எதிர்கொள்ளவிருப்பவை நெருக்கடிகளே


சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி பொருளாதார வட்டாரங்களில் மிகமுக்கியமாகப் பேசப்படுகிறது. அதாவது சீனா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது என்பதே அச்செய்தி. குறிப்பாகப் பல்லாண்டு காலமாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கிய ஜப்பான் நாட்டைத் தாண்டியதாக சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது; அதாவது சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. அதே சமயத்தில் ஜப்பானின் வளர்ச்சியோ 2 சதவிகிதத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஏக்க நிலையிலேயே உள்ளது போன்றவை அதன் முக்கிய அம்சங்கள்.

விஞ்ஞான வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடும் முதலாளித்துவம்




கம்யூனிஸ்ட் அறிக்கையில் மாமேதை மார்க்ஸ் கூறினார் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும் அதை யொட்டிய தொலைத்தொடர்பு சாதனங்களின் முன்னேற்றத்திலும் முதலாளித்துவம் ஆற்றிய சாதனைகள் சமூகத்தின் முகத் தோற்றத்தையே மாற்றியது என்று. அவ்வாறு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியில் மாபெரும் பங்கினை ஆற்றிய முதலாளித்துவம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதைக் கூறினால் சராசரி மனநிலை உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.

நீண்டுகொண்டே போகும் இச்சகம் பாடுவோர் பட்டியல்... கல்விமானுக்குரிய கெளரவத்தை நிரூபித்தார் பேரா.கராசிமா



நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டு முக்கிய விசயங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று அதன் நிரந்தர அங்கங்களான போலீஸ், ராணுவம், நிர்வாகம், நீதி அமைப்பு ஆகியவற்றிற்கென்று தனித்தனி அலுவல்களை வகுத்துக் கொடுப்பது. இரண்டு அவற்றில் ஒன்றின் அதிகாரவட்டத்திற்குள் மற்றொன்று மூக்கை நுழைக்கக் கூடாது என்ற அடிப்படையைப் பேணிப் பராமரிப்பது. அதாவது அவற்றின் தனித்தனி அதிகாரங்களைப் பராமரிப்பது.

கிராமப்புற மாணவர் கல்வி மேம்பாடு என்ற இலக்கினை நோக்கி... இலக்கு இளைஞர் மன்றம் நடத்திய கருத்தரங்கம்



கடந்த ஜீலை 25 - ம் நாள் திருத்தங்கலுக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கூட்டம் கிராமத்தில் இலக்கு இளைஞர் மன்றத்தின் சார்பாக கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களோடு உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டி, மாணவர் ஜனநாயக இயக்கத் தோழர்களும் பெரிய எண்ணிக்கையில் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இலக்கு இளைஞர் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்வதிலும் அதனைச் சிறப்புற நடத்துவதிலும் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலிருந்து அவ்வட்டாரத்தில் கல்வி மேம்பாட்டிற்காகவும் அறிவுப் பரவலாக்கலுக்காகவும் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பொன்றினைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தார்.

சுயநிதி கல்லூரி முதலாளிகளுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள்


கல்வியாண்டில் ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் கல்வித்துறை தற்போது வேறொரு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. அதாவது இதற்குமேல் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட அகில இந்திய தொழில்நுட்ப கவின்சில் அனுமதி வழங்க கூடாது என்று கோரும் தீர்மானம் ஒன்றினை ஏ.ஐ.சி.டி.இ -க்கு அனுப்பியுள்ளது.

பீப்ளி (லைவ்): இந்திய சமூக அமைப்பின் இன்றைய அவலங்களைத் தோலுரிக்கும் அரிய படைப்பு



அங்கதம் (Satire) என்பது ஒரு இலக்கிய வடிவம். ஒன்றில் உள்ள மோசமான கோளாறுகளைக் கேலி செய்வதன் மூலம் அவற்றை மக்களின் புலனறிவுக்கு எட்டச் செய்து அதனைச் சரி செய்வதற்கான அல்லது அதற்கான எதிர்ப்பைத் திரட்டுவதற்காகப் பயன்படும் இலக்கிய வடிவம். கேலி செய்வது நகைச்சுவை அம்சத்தைக் கொண்டிருப்பதால் அது பார்ப்பதற்கும் அல்லது படிப்பதற்குமான ஈடுபாட்டைத் தூண்டக் கூடியதாக இருக்கும். அது எத்தனை முக்கியமான இலக்கிய வடிவம் என்றால் மாமேதை ஸ்டாலினே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 - வது கட்சிக் காங்கிரஸில் முன்வைத்த அவரது அறிக்கையில் சோவியத் சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக் கொணர்ந்து அவற்றின் தீர்விற்கு வழிகோல அங்கதம் போன்ற கலை இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்துங்கள் என கலை இலக்கியத் துறையிலிருந்து வந்து காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

சி.டபிள்யு.பி (CWP) யின் முதல் அமைப்பு மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்



நமது மாற்றுக்கருத்து இதழ் எந்த அமைப்பின் சார்பாக நடத்தப்படுகிறதோ அந்த உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி அமைப்பினை வழிநடத்தும் கண்ணோட்டத்தை வழங்கிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி) அதன் முதலாவது அமைப்பு மாநாட்டை நவம்பர் 19, 20, 21 தேதிகளில் மதுரையில் நடத்தவுள்ளது.சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியாவின் ஸ்தாபகத் தலைவர் தோழர் சிப்தாஷ் கோஷ் இணைந்து அந்த ஸ்தாபனத்தை நிறுவியவரும், அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகப் பலகாலம் விளங்கியவரும், என்று அக்கட்சி சிப்தாஷ் கோஷ் காட்டிய வழியிலிருந்து முற்றாக விலகிவிட்டது என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்தாரோ அன்று அதிலிருந்து விலகியதோடு, இந்தியாவில் உண்மையானதொரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் முயற்சி எஸ்.யு.சி.ஐயின்(SUCI) தோல்வியோடு முற்றுப் பெற்றுவிடவில்லை; அத்தகைய அமைப்பைத் தன்னோடு இணைந்து நிற்கும் தோழர்களைக் கொண்டு உருவாக்கிக் காட்டுவேன் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருபவருமான தோழர் சங்கர் சிங் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பிற்கு உருக்கொடுத்தார்.
எவ்வாறு சிப்தாஷ் கோஷ் இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைத் தவறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு அப்படிப்பினைகளின் அடிப்படையில் எஸ்.யு.சி.ஐ. கட்சியை உருவாக்கி அதன்மூலம் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாரோ அவ்வாறு அதே திசைவழியில் தோழர் சங்கர் சிங் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.பி.ஐ(எம்.எல்). மற்றும் எஸ்.யு.சி.ஐ. கட்சிகளின் அடிப்படைத் தவறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் முயற்சியில் தன் சக தோழர்களோடு இணைந்து ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

Saturday, August 7, 2010

நினைவில் நிற்கும் மனிதர்கள்

சமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தேனும் சமூக அக்கறையுடன் செயல்படும் தங்களது பிள்ளைகளை அப்பாதையில் செல்லவிடாமல் அதிகபட்சம் தடுத்து விடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து பழகிப்போன நமக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்ததாக ஒருவரால் கூறப்பட்ட நிகழ்ச்சியைக் கேட்டபோது அப்பாடா இது போன்ற நிலை எல்லாக் காலங்களிலும் நிலவியிருக்கவில்லை என்ற மனதிற்கு இதமான ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு தந்தை தன் மகனுக்கு கிண்டியிலிருந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும், அவர் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தும் வாரணாசி ஹிந்துப் பல்கலைகழகத்திற்கு அவனை படிக்க அனுப்புகிறார்.

வர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறைவர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறை

24.4.2010 அன்று மதுரை காந்தி மியூஸியம் குமரப்பா குடிலில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் ஆற்றிய உரையின் சராம்சம்.
நானும் தோழர் ஆனந்தனைப் போல பொது நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பின் எனது வாழ்க்கை எனும் ஊர்தியின் திசை மாறிவிட்டது. அவ்வாறு மாறிப் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். முதற்கண் இங்கு நான் வந்தது இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்று எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் எனது பழைய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டோர் அனைவரிடமும் எனது மன்னிப்பையும் கோர விரும்புகிறேன்.

Friday, August 6, 2010

பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு நடவடிக்கைதமிழக ஆட்சியாளரின் கல்விச் சேவையல்ல;

உயர்கல்வி உண்மையாகவே அரசின் வசம் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் பெருகிவரும் கல்வித்தேவை முழுவதையும் நிறைவேற்ற நிதிஒதுக்கீடு செய்ய முடியாது என்று கருதிய பல்கலைகழக மானியக்குழு புதிய உயர்கல்வி நிலையங்கள் திறப்பதை நிறுத்தியது. அச்சமயத்தில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற பெரும் ஜீவ நதிகள் ஓடி விவசாயப் பொருளாதாரம் சிறப்பாக விளங்கி பெரும்பான்மையான மக்களை அதில் ஈடுபடுத்தி வைத்திராத மாநிலங்களில் கல்வி மூலம் மட்டுமே தங்களது எதிர்கால வாழ்க்கையினை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்ற நோக்கில் இருந்த ஏராளமானோருக்கு புது கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதும் அதன் மூலம் கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும் அத்தியவசியமாக இருந்தது.

கேப்பிடலிஸம் : எ லவ் ஸ்டோரிதீயது எதையும் ஒழுங்குபடுத்திப் பராமரிக்க முடியாது அது முடிவுக்குக் கொண்டுவரப்படவே வேண்டும்



தீயது எதையும் ஒழுங்குபடுத்திப் பராமரிக்க முடியாது அது முடிவுக்குக் கொண்டுவரப்படவே வேண்டும்

2008, 2009 களில் தோன்றிய முதலாளித்துவ நெருக்கடி பலரின் கண்களைத் திறந்தது. முதலாளித்துவம் சுதந்திரமான வளர்ச்சியை உறுதி செய்கிறது; அது சுதந்திர வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது; இவ்வாறு எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் என்பதைப் பேணிப் பராமரிப்பது முதலாளித்துவமே; முதலாளித்துவத்தால் தான் நாம் உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பன போன்ற பிரச்சாரங்களில் மயங்கி சோசலிசம் கம்யூனிசம் ஆகியவை எல்லாம் தீய வார்த்தைகள் என்ற மனநிலையில் இருந்த அமெரிக்க மக்களின் கண்களை குறிப்பாக அது பெரிதும் திறந்துள்ளது.

நடத்தப்படுவது செம்மொழித் தமிழுக்கு மாநாடு

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகவும், மூன்று சங்கங்கள் மதுரையில் இருந்ததாகவும் தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. அந்த சங்கங்களின் மூலம் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் பல எழுத்தாளர் சங்கங்களால் தமிழ் இலக்கியம் அப்படியயான்றும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை.
ஏனெனில் ஒரு இலக்கியவாதியின் எழுத்துக்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நீதிபதிகள் வாசகர்களே. எழுத்து முழுக்க முழுக்க வணிக மயமாகிவிட்ட இன்றையச் சூழ்நிலையிலும் கூட நல்ல எழுத்துக்களைப் படிக்கவும் பாராட்டவும் வாசகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஏனெனில் நல்ல எழுத்து உண்மையை எடுத்துக் கூறுவதாக இருப்பதால் அதை எளிதில் அழிக்க முடியாது. ஏனெனில் அது எத்தனை எதிர்மறைச் சூழ்நிலையிலும் தன் வலு முழுவதையும் திரட்டித் தன்னை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவே செய்யும். அது தான் உண்மையின் தன்மை. அப்படிப்பட்ட உண்மையை உயர்த்திப் பிடிக்கும் எழுத்துக்களை வரவேற்கும் சிலராக ஆனால் மேலான சிலராக இருக்கும் வாசகர்களால் பாராட்டப் பெற்ற எழுத்தாளர் சங்க எழுத்தாளர் எவரின் படைப்புகளும் சமீப காலங்களில் வரவில்லை.

அறிவு சார்ந்த மனோதிடத்தைக் கொண்ட கல்விமான்களாக இருங்கள்; இந்த சமூகத்திற்குக் கல்வி கற்றோரின் தரமான தலைமையைத்தர முன்வாருங்கள்

பேராசியர் டாக்டர். அரங்கராமானுஜம் அவர்களின் உரை

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக இயக்குனர்களில் ஒருவரும் தேர்ந்த கல்விமானும் ஆன டாக்டர் பெ.அரங்கராமானுஜம் அவர்கள் கல்விக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராகக் கலந்து கொண்டு முன்வைத்த கருத்துக்கள்:

ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்

ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்

கல்வி மனித குலத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் மகத்தான பங்கினை ஆற்றியது. அந்தநிலை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சீரழிந்துள்ளது. அதன் பரிமாணம், உள்ளடக்கம் இரண்டிலுமே அது அடைந்துள்ள சீர்கேடு வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு உள்ளது.

ஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு

உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதி

மத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.

கிரேக்க நாட்டின் நெருக்கடி முன்னிறுத்தும் படிப்பினை

பொருளுக்கு அழிவில்லை; அதைப் போல் முதலாளித்துவ நெருக்கடிக்கும் தீர்வில்லை

சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பதை ஒத்த விதத்தில் இன்று உலக முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளது. 2008, 2009களில் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி எடுத்த உலகப்பொது நெருக்கடியில் இருந்து முதலாளித்துவப் பொருளாதாரங்கள் மீண்டு வருவதாக ஒருமித்த குரலில் முதலாளித்துவ ஊடகங்கள் கூறிவந்தன. ஆனால் உண்மையில் இன்றுவரை உலகப் பொருளாதாரங்கள் எவையும் குறிப்பிடத்தக்க மீட்சி எதையும் பெறவில்லை.

ஆகஸ்டு 5 மாமேதை எங்கெல்ஸ் நினைவுதினம்

உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைத் தத்துவத்தை உலகிற்கு வழங்கிய இருபெரும் மேதைகளில் இரண்டாவது இடத்தில் நின்று நிலவுபவர் தோழர்.எங்கெல்ஸ் ஆவார். ஆகஸ்டு 5 அவரது நினைவுதினம் ஆகும். 1895 ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாளில் உடல் உபாதை எதனாலும் சிரமப்படாமல் அம்மேதை நினைவிழந்த நிலையில் உயிர் நீத்தார்.

மனிதர்களுக்கிடையில் நிலவும் அத்தனை உறவுகளிலும் மிகவும் மேன்மையானது தோழமையுணர்வு. அதன் சின்னமாகவும், சிகரமாகவும் ஏன் அதன் இலக்கணமாகவும் விளங்கியவை மாமேதைகள் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பும் தோழமையும்.

போபால் விசவாயு வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் யதார்த்தம்

“ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அழிந்தாலும் கூடப் பரவாயில்லை; ஒரு பணக்காரன் அல்லது அதிகாரி கூடப் பாதிக்கப்படக் கூடாது”

விபத்து நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பு போபால் விசவாயுக் கசிவு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் அழிவிற்கும் மாசுபடுதலுக்கும் காரணமாக இருந்த அந்த துயர நிகழ்வின் குற்றவாளிகள் 7 பேருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடனேயே அவர்கள் ஜாமின் கொடுத்து சிறைக்குச் செல்லாமல் வெளியிலும் வந்துவிட்டனர். இந்த விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்திய பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு மற்றும் இந்திய அரசின் கூட்டு முதலீட்டில் உருவான நிறுவனம் ஆகும்.

சந்தைச் சரக்காகக் கல்வியைத் தரம் தாழ்த்திக் கொண்டிருக்கும்,

கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர் ஆனந்தன் ஆற்றிய உரையின் சாராம்சம்:

இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வி குறித்த அவர்களின் கருத்துக்கள் இரு தன்மைகளைக் கொண்டவையாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஒன்று கல்வி என்றால் என்ன என்பது குறித்த சித்தாந்தபூர்வக் கருத்தோட்டம். மற்றொன்று தற்போது நடைமுறையில் வழங்கப்படும் கல்வி எவ்வாறு முன்பிருந்ததைக் காட்டிலும் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது; அதனைக் குறைந்த பட்சம் முன்பிருந்த அளவிற்காவது காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம். இவ்விரண்டில் முன்னதை கல்வியாளர்களின் கருத்துக்கே முழுமையாக விட்டுவிட்டுப் பின்னதை மட்டும் எடுத்துப் பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Wednesday, May 26, 2010

உண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - சர்வதேச மகளிர் தின நூற்றாண்டை அனுஷ்டிப்போம்



-தோழர் சங்கர் சிங்


மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

சுதந்திரத்தை அதிபட்சம் அனுபவிக்க வேண்டிய வயதில் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்குத் தள்ளப்படும் மாணவர் சமூகம்

மனிதன் தோன்றிய நாள் முதல் அவன் நடத்தும் போராட்டங்கள் அனைத்துமே ஒரு பொதுவான இலக்கைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்ப கால மனிதனை ஏறக்குறைய விலங்கோடு விலங்காக அவன் இருந்ததால் இயற்கை அடிமைப் படுத்தியிருந்தது. இயற்கைச் சூழ்நிலை அவன் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் வரை மட்டுமே அவனால் அச்சூழ்நிலையில் வாழ முடிந்தது. அது ஏதுவாக இல்லாத போது ஏதுவான இயற்கைச் சூழ்நிலையை நோக்கி தன்னை காத்துக் கொள்வதற்காக அவன் ஓட வேண்டியிருந்தது.

தாராளவாதக் கல்வி உருவாக்கிய உன்னதத் தன்மைகளை அழித்தொழிக்கும் பாதையில் கல்வியில் தலை தூக்கிவரும் முதலாளித்துவத் தனியார்மயம்

நிலவுடமை அமைப்பைப் புறந்தள்ளி முதலாளித்துவ அமைப்பு உருவானபோது அது சமூகத்திற்கு வழங்கிய மிக முக்கிய வழங்கல் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக்கியதாகும். சமூகத்தின் எந்தெந்த அம்சங்கள் பழைய நிலவுடமை அமைப்பு முறையின் கருத்து ரீதியான தூண்களாக விளங்கினவோ அவற்றையயல்லாம் அடித்து நொறுக்கும் விதத்தில் அந்தக் கல்விமுறை அமைந்தது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை நடத்துவதற்கு வேண்டிய விதத்தில் விஞ்ஞானம் , தொழில் நுட்பம் , கணக்குப்பதிவியல் ஆகியவை சார்ந்த கல்வியை பலருக்கும் வழங்குவதற்காக அன்று நடைபெற்ற கல்விப் பரவலாக்கல் நிலவுடமை அமைப்பின் மிச்சசொச்சங்களையும் இல்லாமல் செய்து, முதலாளித்துவ அமைப்புமுறை நிலையாக நிற்கும் வகையில் ஒரு பலமான அஸ்திவாரத்தை அமைத்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட விஞ்ஞான , தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளோடு வரலாறு , பொருளியல் , தர்க்கவியல் , தத்துவம் , சமூகவியல் போன்ற பல பாடப் பிரிவுகளையும் அதன் கல்வித்திட்டத்தில் கொண்டு வந்தது.

லாப நோக்க உற்பத்தி முறை உருவாக்கியுள்ள உணவுப்பொருள் விலையேற்றம்

அடிப்படையில் அரசின் கொள்கைகள் சார்ந்ததல்ல - அதனை
எதிர்த்த பாவனைப் போராட்டங்கள் பலனெதையும் தரப்போவதில்லை.

முன்னெப்போதும் கண்டிராத உணவுப் பொருள் விலையேற்றம் தற்போது நடுத்தர, பாடுபடும் மக்களை வாட்டிவதைத்துக் கொண்டுள்ளது. அதை மையமாக வைத்து சாதாரண மக்களிடையே தோன்றியுள்ள கொந்தளிப்பு மனநிலைக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கும் விதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல இயக்கங்களை அறிவித்துக் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை பெரிதாக எழுப்பப்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அது பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பிரதம மந்திரி இதனையயாட்டி முதலமைச்சர்கள் மாநாடு ஒன்றை கூட்டி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். ஆலோசனைகள் வருவதற்குப் பதிலாக அக்கூட்டத்தில் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மத்திய அரசும் அதன் கொள்கைகளுமே விலை உயர்விற்குக் காரணம் என்ற கருத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் புரட்சி தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் - அம்சங்களும்


சென்ற இதழில் வெளிவந்த தோழர் சங்கர் சிங்கின்
நவம்பர் தின உரையின் இறுதிப்பகுதி.

...ஆனால் உண்மையில் நடந்ததோ தன்மையிலும் விளைவிலும் முற்றிலும் வேறாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் அதன் பின்னரும் பாசிஸ அபாயத்தை தடுக்கவும் தோற்கடிக்கவும் வேண்டிய வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட அவசரத் தேவையினால் உந்தப்பட்ட உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட்கள் அப்போராட்டத்தில் அதிக முனைப்புள்ள தலைமையான சக்தி என்ற அடிப்படையில் எல்லா இடங்களிலும் வெகுஜன மற்றும் கட்சி அமைப்புகளை விரிவுபடுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு விரிவு படுத்துவதில் கட்சி , வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளாலும் நடத்தப்படும் பேரணிகள் மற்றும் இயக்கங்களும் அளவில் எவ்வளவு பெரிதாக இருக்க முடியுமோ அவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒரு பக்கத்திற்கு கொடுக்கப்பட்ட அளவுக்கதிகமான கூடுதல் அழுத்தத்தின் விளைவு பங்கெடுத்துக் கொண்ட கட்சிகள் மற்றும் வெகுஜனங்களின் தத்துவார்த்த தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற அம்சத்தில் அளவுக்கதிகமாக குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் போய் முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஒவ்வொரு வியத்திலும் தலைமையை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றும் காப்பியடிக்கும் போக்கும் இயந்திர கதியிலான சிந்தனை முறையும் எழத் தொடங்கி அதன் அபாயகரமான விளைவாக , தலைமைக்கும் தலைமைதாங்கப் படுபவர்களுக்கும் இடையிலான இயக்கவியல் உறவு எல்லா மட்டங்களிலும் ஒரு வகையான மேலதிகாரி கீழ்ப்படிபவர் உறவாக மாறியது.

முதலாளித்துவச் சுரண்டலின் பல பரிமாணங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் அங்காடித் தெரு


பொருள் முதல்வாதமும் கருத்து முதல்வாதமும்

பொருள் முதல்வாதம் சொல்கிறது மனிதனின் சிந்தனையும் கருத்துக்களும் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல், சமூகம் அவற்றில் நடக்கும் இயக்கங்கள், நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களின் பிரதிபலிப்பே என்று. அதாவது நான் என்ற பொருளாளாகிய ஒருவன் அவனிடம் இருக்கும் மூளை என்கிற பொருளாளாகிய ஒன்றைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து பிரதிபலிப்பதே சிந்தனை என்பது பொருள் முதல்வாதிகளின் வாதம். ஆனால் கருத்து முதல்வாதிகளோ நான் சிந்திக்கிறேன் அதனால்தான் நான் இருக்கிறேன்; அதாவது நான் என்பதைவிடவும் என் சிந்தனைதான் முதன்மையானது என்று கூறுவர்.

அரசியல் புரட்சியின் முன்னோடியாகும் கலாச்சாரப் புரட்சி

பாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும்

இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.

முதலாளித்துவ உற்பத்தி நோக்கங்களுக்கு உகந்த கொள்கைகளை மாறிவரும் சமூகத் தேவைக்கானதென முன்வைக்கும் அரசு

மாறிவரும் காலத்திற்குத் தகுந்த மாறுதல்களை கல்வியில் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் பல கருத்துக்கள் , பல கொள்கைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அறிவைப் பெறுவதற்காகவே; கல்விக்கும் வேலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற முழக்கம் ஒரு சமயம் முன் வைக்கப்பட்டது. அந்தக் கருத்து முன் வைக்கப்பட்ட போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்தவர் கூறினார் : படித்துவிட்டு வேலையில்லாதிருப்பவர்கள் வெடிகுண்டுக்கு சமமானவர்கள் என்று.

தியாகி பகத்சிங்கின் 79 வது நினைவு தினம்




தியாகி பகத்சிங்ன் 79வது நினைவுதினம் இந்த ஆண்டு சி.டபிள்யு.பி. மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் உரிய விதத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஆனைக்கூட்டம் மற்றும் மாதாங்கோவில் பட்டியிலும் மதுரை மாவட்டம் சமயநல்லூரிலும் மார்ச் 23 அன்று நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மார்ச் 28 அன்று சமயநல்லூரில் மிகுந்த கலை உணர்வுடன் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்த தோழர்.ம.வினோத் குமார் தலைமை ஏற்றார். சி.டபிள்யு.பி. மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளின் தோழர்களான மாற்றுக் கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவக்குமார் , உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர்.வரதராஜ் , சி.டபிள்யு.பின் சமயநல்லூர் கிளை அமைப்பாளர் தோழர்.ராமநாதன் , அச்சகத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர்.செல்வராஜ் , பட்டாசுத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர்.தங்கராஜ் , ஆகியோருடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் தோழர்.பகத்சிங் மற்றும் அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த திரு செ.மலையாளம் ஆகியவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.