சென்ற இதழில் வெளிவந்த தோழர் சங்கர் சிங்கின்
நவம்பர் தின உரையின் இறுதிப்பகுதி.
...ஆனால் உண்மையில் நடந்ததோ தன்மையிலும் விளைவிலும் முற்றிலும் வேறாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் அதன் பின்னரும் பாசிஸ அபாயத்தை தடுக்கவும் தோற்கடிக்கவும் வேண்டிய வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட அவசரத் தேவையினால் உந்தப்பட்ட உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட்கள் அப்போராட்டத்தில் அதிக முனைப்புள்ள தலைமையான சக்தி என்ற அடிப்படையில் எல்லா இடங்களிலும் வெகுஜன மற்றும் கட்சி அமைப்புகளை விரிவுபடுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு விரிவு படுத்துவதில் கட்சி , வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளாலும் நடத்தப்படும் பேரணிகள் மற்றும் இயக்கங்களும் அளவில் எவ்வளவு பெரிதாக இருக்க முடியுமோ அவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒரு பக்கத்திற்கு கொடுக்கப்பட்ட அளவுக்கதிகமான கூடுதல் அழுத்தத்தின் விளைவு பங்கெடுத்துக் கொண்ட கட்சிகள் மற்றும் வெகுஜனங்களின் தத்துவார்த்த தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற அம்சத்தில் அளவுக்கதிகமாக குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் போய் முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஒவ்வொரு வியத்திலும் தலைமையை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றும் காப்பியடிக்கும் போக்கும் இயந்திர கதியிலான சிந்தனை முறையும் எழத் தொடங்கி அதன் அபாயகரமான விளைவாக , தலைமைக்கும் தலைமைதாங்கப் படுபவர்களுக்கும் இடையிலான இயக்கவியல் உறவு எல்லா மட்டங்களிலும் ஒரு வகையான மேலதிகாரி கீழ்ப்படிபவர் உறவாக மாறியது.
எந்திரமய சிந்தனையும் குருட்டுத்தனமும்
இந்த எதிர்மறையான வளர்ச்சிப் போக்குகள் , சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் உள்ளார்ந்த உயிரோட்டத்தில் எந்த ஆழத்திற்கு கண்ணுக்குத் தெரியாமல் செல்லரித்துக் கொண்டிருந்திருக்கிறது என்பது ஒரு காலத்தில் மிகுந்த மரியாதைக்குரிய சர்வதேச கம்யூனிஸ இயக்கத் தலைவராக இருந்த மார்ல் டிட்டோ ஒருநாளிரவில் சோவியத் விரோத நிலை எடுத்து , தன் யுகோஸ்லாவிய நாட்டிலிருந்து சோவியத் படைகள் வெளியேற வேண்டும் என்று கேட்டதுடன் எதிர் நடவடிக்கையாக பால்கன் நாடுகள் அனைத்துடனும் இணைந்து பால்கன் கூட்டமைப்பை உருவாக்கும் தனது எண்ணத்தையும் அறிவித்த போது சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் அப்போதைய தலைமை மையமாக இருந்த சர்வதேச அகிலம் டிட்டோ ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்று அறிவித்து அவரை சர்வதேச அகிலத்திலிருந்து வெளியேற்றிய போது அதன் எதிரொலியாக டிட்டோவின் தலைமையை மாற்றுமாறு சர்வதேச அகிலம் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து யுகோஸ்லாவாகிய கம்யூனிஸ்ட் கட்சியாகிய கம்யூனிஸ்ட் லீக் ஆப் யுகோஸ்லாவாகியா எடுத்த எதிர் நடவடிக்கையின் போது திடீரென்று வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது. தோழர் சிப்தாஸ் கோஷ் தனது கம்யூனிஸ இயக்கத்தின் மீதான விமர்சனத்தில் இவ்வளர்ச்சிப் போக்கை குறிப்பிட்டு , கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் சர்வதேச அரங்குகளிலும் பெருகிவரும் நோயாகிய இயந்திர கதியிலான சிந்தனையிலிருந்தும் அதன் விளைவான குருட்டுத்தனமாக தலைமையைப் பின்பற்றும் போக்கிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள சர்வதேச கம்யூனிஸ இயக்கம் தக்க நடவடிக்கை எடுக்கத் தவறுமானால் விளைவுகள் பேரழிவைத் தருவதாக இருக்கும் , தேசிய அளவில் புரட்சியைச் செய்து முடித்த கம்யூனிஸ நாடுகள் கூட தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் அளவிற்கு அது போகலாம் என்று எச்சரித்தார். ஆனால் தோழர் கோஷ்ன் சரியான நேரத்தில் செய்யப்பட்ட விமர்சனம் எடுத்துக் கொள்ளப்படாமலேயே போய்விட்டது. கம்யூனிஸ இயக்கத்திற்குள்ளிருந்த அந்நோய் காரணம் எதுவாக இருந்த போதிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
புரிதல் மட்டம் வளராத போக்கு
அனைத்து அம்சங்களிலும் இடையறாது வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும் பொருளியல் உலகில் குறிப்பாக சமூக வாழ்க்கையில் இடையறாது எழுந்து கொண்டிருக்கும் புதிய புதிய சூழ்நிலைகளின் பின்னணியில் கம்யூனிஸ்ட்கள் அதற்குப் பொருத்தமான விதத்தில் வியங்களைப் புரிந்து கொள்ளும் புரிதல் மட்டத்தை வளர்த்துக் கொள்ளத் தவறுவார்களேயானால் , தங்களது தத்துவார்த்த உணர்வு மட்டத்தை உயர்த்திக் கொள்ளத் தவறுவார்களேயானால் அவர்களது பழைய புரிதலானது ஒப்பீட்டளவில் மேலும் மேலும் போதாத ஒன்றாக ஆகிக் கொண்டேயிருக்கும். சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் மிகச் சரியாக இதுவே நடந்தது.
தத்துவார்த்த உணர்வுமட்டக் குறைவு விமர்சனம் சுய விமர்சனத்தைச் சாரமிழக்கச் செய்யும்
தங்களது உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை தங்குதடையின்றி மக்கள் பயன்படுத்துவதற்கான முழு வாய்ப்பையும் உத்தரவாதம் செய்து கொண்டே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பிசகின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்கு முழு சோசலிச சமுதாய அமைப்பிலும் உயர்ந்த தலைமை அமைப்பாகிய பாட்டாளி வர்க்கக் கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் மையக் கோட்பாடுகள் எவ்வித மாற்றமுமின்றி செயல்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு ஜனநாயக மத்தியத்துவம் சரியாகச் செயல்படுவதற்குக் கட்சி மற்றும் அதன் கீழ் உள்ள மற்ற முன்னணி அமைப்புகளின் நடவடிக்கைகளில் விமர்சன மற்றும் சுய விமர்சன நடைமுறைகள் அதன் மாறாத ஒரு பகுதியாக அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏதேனுமொரு அல்லது ஒவ்வொரு நிகழ்வையும் அகவய ரீதியிலான காரணிகள் எதனுடைய பாதிப்பும் அதன் மீது ஏற்பட அனுமதிக்காமல் உண்மை மற்றும் யதார்த்தத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதற்குத் தேவையான தத்துவார்த்த உணர்வு மட்டம் போதுமான அளவிற்கு இல்லாதிருக்கும் நிலையில் கம்யூனிஸ இயக்கத்தின் சுயமாக தவறுகளை சரிசெய்து கொள்ளும் நடைமுறை என்ற அடிப்படையில் விமர்சனம் சுயவிமர்சனம் அதன் சாரத்தை இழந்துவிடும். அது கட்சியின் கோட்பாட்டுடன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் தரத்தை உயர்த்துவதற்கும் ஒற்றுமையை மேலும் உறுதிப் படுத்துவதற்கும் பதிலாக மேலும் அதிக ஒற்றுமையின்மையையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரின் தனிநபர் தகராறுகளையே ஏற்படுத்தும். எனவே தத்துவார்த்த உணர்வு மட்டத்தை உயர்த்துதல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த எதிர்மறைப் போக்குகள் ஸ்டாலின் காலத்திலேயே வளர்ச்சியடையத் தொடங்கிவிட்டது என்றாலும் கூட அவர் உயிருடன் இருக்கும் வரை அவர் தலைமையில் இருக்கும் வரை இந்நோய் அதன் அபாயகரமான விளைவுகளுடன் அந்த அளவிற்கு வெளிப்படவில்லை. ஸ்டாலின் மறைந்தவுடன் அது தனது நவீன திருத்தல் வாதம் எனும் கோரமுகத்துடன் வெளியில் வந்தது. அது சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றங்கள் அல்லது திருத்தங்களை முன்மொழிந்தும் அறிமுகம் செய்தும் அவற்றை சாராம்சத்தில் சோசலிச விரோத முதலாளித்துவ வழிமுறைகளால் இடம் பெயர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான சதித்திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது.
ஊக்கத் தொகையின் அறிமுகம் தொழிலாளரை அவமதிப்பதாகும்
நவீன திருத்தல் வாதிகள் , அவர்கள் நினைத்ததை செய்து முடித்துவிட்டனர். நவீன திருத்தல் வாதிகள் தாங்கள் விரும்பியவாறு முதலாளித்துவ குப்பைகளை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படக் காரணமான தங்கள் தவறுகளை இனம் காண கம்யூனிஸ்ட்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளாத வரை நவீன திருத்தல் வாதிகளை கடுமையான மிகக் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. நவீன திருத்தல் வாதிகளின் முன்னோடியான குருஷேவ் , ஊக்கத்தொகை இல்லாமல் தொழிலாளர்கள் உற்பத்தியை பெருக்கவோ மேம்படுத்தவோ மாட்டார்கள் என்று கூறி சோவியத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறையை அறிமுகப் படுத்திய போது சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கூட்டத்தில் முதலாளித்துவ வாதிகளும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் எப்போதும் எல்லா இடங்களிலும் சொல்வதையே அவர் சொல்கிறார் என்று கூறி குருஷேவ் ஐ எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு எவரும் இல்லை. வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளருக்கு ஊக்கத் தொகையினை முன்மொழிவது அத் தொழிலாளர்களை அவமதிப்பதாகும். சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் நடைமுறை முழுவதிலும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்கள் ஆற்றிய மாபெரும் பங்களிப்பின் பெருமையை சீர்குலைப்பதாகும். முதலாளித்துவ உலகில் எங்கும் இருப்பதுபோல் ஜாரின் ருஷ்யாவிலும் கூட ஊக்கத்தொகை வழங்கும் முறை இல்லாமலா இருந்தது. ஆனால் தொழிலாளர்கள் லெனின் தலைமையில் வர்க்க உணர்வு பெற்றவர்களாக வளர்ச்சியடைந்தும் முதலாளித்துவத்தின் அடிமை நுகத்தடியிலிருந்து மனித சமுதாயம் முழுவதையும் விடுவிக்கும் கடமையை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேறியும் இருந்த நிலையில் ஊக்கத் தொகைக்காக வேலை செய்வது குப்பைத் தொட்டியில் தூக்கியயறியத் தகுதியான அழுகிப்போன விசயமாக அவர்களுக்குத் தோன்றியது. தூக்கியயறியப்பட்ட அந்த அழுகிய விசயத்தை குருஷேவ் மீண்டும் குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வந்து கட்சியின் தலைமைக் கூட்டத்தில் முன் வைக்கிறார்; அதனை எதிர்ப்பதற்கு அங்கே எவரும் இல்லை. இதுதான் ஒரு காலத்தில் மிகுந்த திறமையுடன் நவம்பர் புரட்சியையும் அதன் பிறகு சோவியத் யூனியனையும் தலைமை தாங்கி நடத்திச் சென்ற லெனினது கட்சியில் கீழ்நிலையில் இருந்த தத்துவார்த்த உணர்வு மட்டத்தின் ஆழமாக இருந்தது.
குருசேவ்ன் ஸ்டாலின் மீதான தாக்குதலின் இலக்கு லெனினே
அதுபோல , கம்யூனிஸ இயக்கத்தில் தனிநபர் துதிபாடும் போக்கை எதிர்க்கும் சரியான முழக்கத்தை எழுப்பிக் கொண்டே குருஷேவ் , ஸ்டாலின் எனும் தனிநபருக்கு எதிராக அதுவும் அவர் இறந்த பின்னர் தனது தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டபோது , ஸ்டாலின் துதிக்கு எதிரான போராட்டம் என்பதன் அர்த்தம் ஸ்டாலின் மீது வெறுப்பை உண்டாக்குவது அல்ல என்று காட்டி அதனை எதிர்ப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒருவர் கூட இல்லை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமல்ல சரியாகச் சொன்னால் சர்வதேச கம்யூனிஸ இயக்கம் முழுவதிலுமே ஸ்டாலினுடைய மதிப்பின் மீது வெறுப்பை விதைப்பதற்கும் உலக கம்யூனிஸ இயக்கத்தில் அவர் வகித்து வரும் மேலான நிலையில் இருந்து அவரைக் கீழே புழுதியில் தள்ளுவதற்கும் ஒரேயயாரு நோக்கம் அதன் மூலம் லெனினின் மதிப்பைப் குலைப்பதாகவே இருக்க முடியும் என்பதை உணர முடிந்தவர் எவரும் இல்லை. உலகத்தால் லெனினிஸம் என்று அறியப்பட்டதன் மறுக்க முடியாத சிற்பியும் அதில் அதிகார உரிமை பெற்றவரும் ஸ்டாலினைத் தவிர வேறு எவரும் இல்லை. குறிப்பிடத்தக்க மார்க்சிய சிந்தனையாளராகிய சிப்தாஸ் கோஷ் , குருஷேவ்ம் அவரைப் பின்பற்றுபவர்களும் நடத்திய ஸ்டாலினுக்கு எதிராக சேறு வாரியிறைக்கும் நீதியற்ற போர் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களின் பின்னால் இருக்கும் சதித்திட்டத்தை உணர்ந்து குருச்சேவின் தலைமையிலான நவீன திருத்தல் வாதிகளின் சதித்திட்டத்திற்கு பழியாகி விடாமல் கம்யூனிஸ இயக்கத்தைக் காக்குமாறு சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தை தெளிவான வார்த்தைகளில் எச்சரித்தார். ஆனால் எவருக்கும் தெரியாத அலங்காரமற்ற நபராகிய சிப்தாஸ் கோஷ் பூமிப் பந்தின் இந்த ஒரு மூலையில் என்ன சொன்னார் அல்லது சொல்லவில்லை என்பதை சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் எவர் பார்த்தார்கள்? அதன் பலன் அனைவரும் அறிந்ததே.
ஆடம்பர வாழ்க்கையின் பாலான ஈர்ப்பு
பொதுவாக சோசலிச உலகைச் சேர்ந்த அனைத்து நாடுகளிலும் குறிப்பாக பாசிஸ ராணுவத்திற்கெதிராக செஞ்சேனை ஒட்டுமொத்த வெற்றியினை ஈட்டிய சூழ்நிலையில் , செஞ்சேனையின் உதவியுடன் விடுதலையடைந்த சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கு ஒப்பீட்டளவில் அவசர கதியில் வாய்ப்பாகக் கிடைத்த ஜனநாயக மற்றும் சோசலிச சக்திகளின் கூட்டில் மக்கள் ஜனநாயக அரசு ஏற்படுத்தப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த தத்துவார்த்த உணர்வு மட்டக் குறைவின் எதிர்மறை விளைவுகள் கோரமான வடிவத்தில் வெளிப்படத் தொடங்கின. அந்நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட்களில் ஒரு பகுதியினர் குறிப்பிடத்தகுந்த அளவு தொழிலாளர்களுடன் சேர்ந்து உலகத் தொழிலாளி வர்க்கப் புரட்சியை அதன் இறுதி இலக்கு வரை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தங்கள் கடமையை மறந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பாரம்பரிய ஏகாதிபத்திய நாடுகளில் இருப்பது போன்று பொருளியல் ரீதியிலான ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பதை நோக்கி மேலும் மேலும் ஈர்க்கப்பட்டனர். அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொதுவாக மேம்படுத்துவதைக் காவு கொடுத்தாகிலும் அந்த ஆடம்பர வாழ்க்கையைப் பெறுவதற்கான வாய்ப்பு சோசலிசத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாத விசயமாக இருந்ததனால் அவர்கள் சோசலிசத்தையே எதிர்க்கத் தொடங்கினர்.
மிகமோசமான தத்துவார்த்த உணர்வு மட்டக் குறைவின் காரணமாக கம்யூனிஸ இயக்கத்திற்குள்ளேயே நவீன திருத்தல் வாதிகளாகப் பிறந்த இந்த சக்திகளும் உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகள் மற்றும் அனைத்து பிற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து இந்த சோசலிச நாடுகள் அனைத்திலும் சோவியத் யூனியனிலும் ஒன்றன்பின் ஒன்றாக எதிர்ப் புரட்சியைக் கொண்டுவந்து அதன் மூலம் தொழிலாளி வர்க்க அரசு அதிகாரங்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கினர். அதனுடன் கூடவே எதிர்காலத்தில் எழ வாய்ப்புள்ள சோசலிசப் புரட்சியின் மறு எழுச்சியைத் தடுப்பதற்கான தங்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் பாசிஸத்தின் தத்துவார்த்த அடித்தளமாக இருக்கும் தேசிய வெறிவாதம் எனும் பலமான காற்றை விசிறி விட்டனர். தத்துவார்த்த உணர்வு மட்டக் குறைவினால் ஏற்பட்ட பேரழிவு மிகப் பெரியது. அதனை ஒட்டு மொத்தத்தில் உலகளவில் செய்து முடிக்கப்பட்டுள்ள பாசிஸ எதிர்ப் புரட்சியின் வெற்றி என்றே சொல்லலாம்.
படிப்பது மட்டுமல்ல புரிதலை உயர்த்துவதும் அவசியமாகும்
கம்யூனிஸ இயக்கத்தில் தத்துவார்த்த உணர்வுமட்டம் குறைவதும் அதனை உயர்த்துவதும் பற்றிய இக்கேள்வியுடன் தொடர்புடைய ஒரு அம்சமும் தெளிவு படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். தத்துவார்த்த உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் மற்றும் பிற சிந்தனையாளர்கள், குறிப்பிடத்தக்க தலைவர்களின் படைப்புகள் மற்றும் எழுத்துகளை படிப்பது மீண்டும் மீண்டும் படிப்பது அதனை மனப்பாடம் செய்வது மட்டும் போதுமானதல்ல. அத்தலைவர்களின் படைப்புகள் மற்றும் முதல்தர இலக்கியங்களை படிப்பது , மீண்டும் மீண்டும் படிப்பதுடன் கூடவே அவர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் பற்றிய புரிதலை உயர்த்த முடிந்தவர்களாக குறிப்பாக அவற்றில் எது இன்றும் ஏற்கத்தக்கதாகவும் செல்லத்தக்கதாகவும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு செய்ய முடியவில்லை எனில் அதன் பொருள் மாறிவரும் யதார்த்தங்களுக்கு இணையாகச் செல்ல உங்களால் முடியவில்லை என்பதே.
ஆயினும் இவ்வாறு வெற்றிகரமான நவம்பர் புரட்சியின் மூலமும் அதனைத் தொடர்ந்த முன்னோக்கிய அணிவகுப்பின் மூலமும் சோசலிசம் அடைந்த பலன்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய வாதிகளால் உலகத் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து மீண்டும் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை உலகின் மூன்றில் ஒரு பங்குப் பகுதியில் ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேலாக சோசலிசம் நிலை பெற்றிருந்த பின்னரே அவர்களால் அதைச் செய்ய முடிந்தது. வெற்றிகரமான பாரி கம்யூன் நிலை பெற்றிருக்க முடிந்த கால அளவுடன் ஒப்பிடுகையில், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் மார்க்ஸ்ம் எங்கெல்ஸ்ம் முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் இடைமாறுதல் கட்டத்தின் போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கோட்பாட்டை புகுத்தியதன் காரணமாக தொழிலாளி வர்க்க அரசு நிலை பெற்றிருந்த அக்கால அளவு நூற்று ஐம்பது மடங்கு கூடுதலாகியிருக்கிறது. கம்யூனிஸ இயக்கத்தின் மீது விழுந்த அடியின் பேரழிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் புரட்சிக்கு ஆதரவாக சூழ்நிலை தலைகீழாக மாறுவதற்கான வாய்ப்புகள் பலருக்கும் தோன்றுவது போல் எத்தனை மெல்லியதாக இருப்பினும் முற்றாக சோர்வைத் தரும் முடிவுக்கு வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. தொழிலாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிர்மூலமாக்குவதிலும் சோசலிச விரோத எதிர்ப்புரட்சி அலையை வீசச் செய்திருப்பதிலும் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நவீன திருத்தல் வாதிகளின் கூட்டணியால் ஈட்டப்பட்டிருக்கும் வெற்றியானது முதலாளித்துவம் இறக்கும் தறுவாயில் இருக்கிறது என்ற உண்மையை பொய்யாக்கி விட்டதாக எவரும் எண்ணிவிடக் கூடாது. இதுவரையிலும் நிலவிய பல்வேறு சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை அமைப்புகளின் மிச்சசொச்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருந்தூணாக இருக்கும் முதலாளித்துவத்தை முற்றாகத் தூக்கியயறிவதை இலக்காகக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் இப்புரட்சிகரப் போர் என்பது இந்த ஒரு தோல்வியை மட்டுமே வைத்து இறுதியாக முடிவெடுக்கலாம் எனும் அளவிற்கு அத்தனை எளிமையான விசயம் அல்ல. அதனால்தான் சீனப்புரட்சியின் மாபெரும் தலைவரும் ஆசானுமாகிய மாசேதுங் இப்புரட்சிகர மக்கள் யுத்தத்தின் வெற்றி தோல்வியினைப் பற்றிய நடைமுறை பற்றி இவ்வாறு கூறினார்: “நம்முடைய தரப்பைப் பொறுத்தவரை இறுதியாக வெற்றி பெறும் வரையிலும் நமக்கு தோல்வி மேல் தோல்வியே; அவர்கள் தரப்பைப் பொறுத்தவரை இறுதியாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்படும் வரையிலும் அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றியே.”
அடிப்படையையே அசைத்த நெருக்கடி
இன்று உலக முதலாளித்துவம் கடுமையானதொரு நெருக்கடியில் இருக்கிறது. உற்பத்தித் தேக்கம் எனும் நெருக்கடி அதன் இருப்பையே அச்சுறுத்திக் கொண்டுள்ளது. இது நிச்சயமாக அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைக் காட்டவில்லை. நெருக்கடியானது அமெரிக்காவில் மட்டுமே நூற்று இருபதுக்கும் மேற்பட்ட வங்கிகள் நெருங்கிய எதிர்காலத்தில் மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை இன்றி நொடிந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு மூடவேண்டிய அளவிற்கு கடுமையானதாக உள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஆலைகள், தொழிற்சாலைகள் முதலானவை மூடப்பட்டதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகளின் தரை மட்டமான வீழ்ச்சிகளால் லட்சக் கணக்கான குடும்பங்கள் ஒரே நாளிரவில் ஒன்றும் இல்லாதவர்களாகி விட்டனர். உலகிலுள்ள முதலாளித்துவ நாடுகள் , நெருக்கடியின் தீவிரத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கும் பாதுகாப்பாக நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்குமான தங்களது முயற்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்முயற்சியில் ஜீன் 8 மற்றும் ஜீன் 20 நாடுகள் என்ற பெயர்களில் பலமுறை ஒன்றாகக் கூடி விவாதித்து விட்டனர். இந்தக் கூட்டங்களிலிருந்து அவர்கள் மூலதனத்தின் புழக்கத்தைப் பராமரிப்பது என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் பிற பாரம்பரிய பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் அரசுக் கருவூலம் மற்றும் ஐ.எம்.எப் , உலக வங்கி போன்ற முகமைகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்கள் பணத்தை பல்வேறு முதலாளிகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பது என்று முடிவு செய்தனர். இந்தக் கூட்டங்களில் நேரில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்நாட்டில் இந்நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உண்மையான அபாயத்தின் தீவிரத்தை மக்கள் அறியா வண்ணம் மறைப்பதற்கு நாட்டின் பொருளாதாரம் அத்தனை ஸ்திரமாக இருப்பதாகவும் உலகப் பொருளாதார நெருக்கடி அதன் மீது எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதாகவும் பொய்யாகக் கூறிக் கொண்ட போதிலும் அமெரிக்கா மற்றும் பிற பெரிய பணக்கார நாடுகளிடம் அத்தகைய உதவிகளுக்கான உறுதி மொழியைப் பெற்றுக் கொண்ட பின்னரே நாடு திரும்பினார். நாட்டின் மின்னணு ஊடகங்களும் செய்தி ஊடகங்கள் முதலானவைகளும் பிரதமரின் நற்பெயரை பொய்யாக உயர்த்திக் காட்டுவதற்கு பொருளாதார நெருக்கடியே சமாளிக்கப்பட்டு விட்டது போன்று கூடப் பிரச்சாரம் செய்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்வு
பொதுவான வார்த்தைகளில் பொருளாதார வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்நெருக்கடி இந்தியாவில் ஏற்படுத்திய பேரழிவு சாதாரணமானதல்ல. ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் உற்பத்தி குறைப்பு பெரிய அளவில் தொழிலாளர்களை ஆட்குறைப்பு அல்லது லேஆப் செய்தல் போன்றவற்றால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வேலை இழந்துள்ளனர். சந்தையில் குறிப்பாக அமெரிக்கா , ஐரோப்பிய யூனியன் சந்தையின் தேவை பெரிய அளவில் குறைந்து போனதன் காரணமாக நாட்டின் ஏற்றுமதி பெரிய அளவில் குறைந்து பாதிப்படைந்தது. நெருக்கடியின் தீவிரத்தையும் அதன் விளைவையும் பஞ்சாலைத் தொழிலில் மட்டும் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர் என்ற உண்மையிலிருந்து நன்கு அளவிடலாம். மக்களை ஏமாற்றுவதற்காகவே முதலாளித்துவ வாதிகளின் புத்திசாதுர்யமிக்க பிரச்சாரகர்கள் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியின் பெரும் பாதிப்பிலிருந்து தப்பி விட்டதாக பொய் சொல்கின்றனர்.
நெருக்கடிக்குத் தீர்வே இல்லை
இம்முதலாளித்துவச் சந்தை நெருக்கடியானது ஏதோவொரு குறிப்பிட்ட முதலாளித்துவ நாடு அல்லது அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கை அல்லது நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டதல்ல. இது முதலாளித்துவச் சந்தைப் பொருளாதராத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும். இந்நெருக்கடி கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சில நேரங்களில் தீர்மானகரமானதாகவும் சில நேரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவினதாகவும் அதனுள்ளே இருந்து கொண்டே இருக்கக் கூடிய நெருக்கடியாகும். முதலாளித்துவத்தின் கீழ் இதற்குத் தீர்வே கிடையாது. அவர்களது பொருளாதாரத்தின் இந்த நெருக்கடியின் காரணமாகவே முதலாளித்துவ நாடுகள் கூடுதலான சந்தையைப் பிடிக்கும் முயற்சியில் மற்றொரு நாட்டிடம் இருக்கும் சந்தையைப் பலவந்தமாகப் பறிப்பதற்கே இரண்டு உலக யுத்தங்களை 1914 முதல் 1918 வரை ஒன்றும் , 1939 முதல் 1945 வரை மற்றொன்றும் நடத்தினர்.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய முன்னாள் சோசலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் முழுவதும் முதலாளித்துவச் சந்தையுடன் ஒன்றிணைந்த பின்னரும் அதே சந்தை நெருக்கடி இப்போது வந்திருப்பதைப் போல் இத்தனை தீவிரமான வடிவில் மீண்டும் தோன்றியிருப்பதே இன்றைய முதலாளித்துவத்தைத் தாக்கியுள்ள நோயின் தீவிரத்தைப் பற்றிப் பேசும். ஜீன் 20 அல்லது ஜீன் 8 நாடுகள் முதலாளிகளுக்கும் பிற நாடுகளுக்கும் வழங்கும் எந்தவொரு தீர்வுத் திட்டங்களாலும் அவர்களின் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது. அவர்களுக்கு ஒரு வகையில் தற்காலிக நிவாரணத்தை வழங்குவதாக இருக்குமேயயாழிய அதைத் தாண்டி வேறொன்றுமில்லை. இந்த மாதிரியான முயற்சிகளின் மூலம் இந்நெருக்கடிக்கு தீர்வு எதனையும் காணமுடியாமல் போகையில் இதற்கு முந்தய சமயங்களைப் போலவே இம்முறையும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மூன்றாவது உலகப் போரில் ஈடுபடப் போகும் அபாயமும் உள்ளது.
குணாம்ச ரீதியிலான மாற்றமே இன்றைய தேவை
தற்போதய தீவிர சந்தை நெருக்கடியானது முதலாளித்துவம் ஏற்கனவே அதன் வாழ்நாளைக் காட்டிலும் கூடுதலாக வாழ்ந்துவிட்டது. இப்போது அது போக வேண்டிய நாள் குறிக்கப்பட்டு விட்டது என்று தெளிவாகக் கூறுகிறது. புதியன எதையும் இன்றும் பார்க்காத எதையும் வரவேற்க இயலாத தனது இயலாமையினால் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல முதலாளித்துவமே என்றும் நீடித்திருக்க கூடிய சமூக அமைப்பு முறை என்று நினைப்பது சரியானதுமல்ல; வாழ்க்கை மற்றும் சமூக யதார்த்தங்களுடன் ஒத்துப் போவதுமல்ல. மனிதகுல வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு காலத்தில் அடிமை சமுதாய முறை இருந்தது. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்து பிரம்மாண்டமானதும் நினைவுகூரத்தக்கதுமான பல செயல்களைச் செய்து பின்னர் காலாவதியாகி விடைபெற வேண்டியதாகிவிட்டது. அதைப்போலவே அடிமை சமுதாய முறையை ஒழித்து விட்டு புதிய சமூக ஒழுங்காக வந்த நிலப்பிரபுத்துவ சமுதாயமும் நீண்ட காலம் இருந்து பல நினைவுகூரத்தக்க பெருமிதம் கொள்ளத்தக்க பல பணிகளைச் செய்து பின்னர் காலாவதியாகி , மனிதகுல முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இயலாததாக ஆனவுடன் நவீன முதலாளித்துவத்தால் இடம் பெயர்க்கப் பட்டது. மறுபடியும் , 16 வது மற்றும் 17 வது நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்தைத் தொடர்ந்து தொழிற் புரட்சியின் வடிவில் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட பிரம்மாண்டமான பாய்ச்சலின் அடிப்படையில் வந்த முதலாளித்துவம் , நவீன பார்வை , விஞ்ஞானம் , தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தூண்டுதலை வழங்கி அதன்மூலம் குறிப்பிட்ட அளவிற்கு அதிகரித்த சமுதாயத்தின் உற்பத்தி சக்திகள் தற்போது நிலவும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் ஒத்துப் போக இயலாத நிலையை அடைந்துள்ளது. முதலாளித்துவத்தின் கருப்பையில் பிறந்த புதிதாக அதிகரிக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் , காலாவதியாகிப் போன உற்பத்தி முறையான முதலாளித்துவத்தை தூக்கியயறியுமாறு கோருகிறது. தான் செயல்படுவதற்குப் பொருத்தமான புதிய அமைப்பு முறையால் அதனை இடம் பெயர்க்குமாறு கோருகிறது. இம் முதலாளித்துவ உற்பத்தி முறையானது உற்பத்தி மற்றும் பகிர்ந்தளிப்பின் பல்வேறு மட்டங்களில் லாபம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பே இல்லாதவொரு புதிய சமுதாயத்தால் இடம் பெயர்க்கப்பட வேண்டும். பல்வேறு மட்டங்களில் செயல்படும் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளிப்பு முறையின் பின்னிருந்து இயக்கும் உந்து சக்தியாக லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருக்காது. சந்தையில் விற்று லாபம் சம்பாதிப்பதற்காக சரக்குகளை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்துவற்காக பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்திக் கருவிகளாக இருக்கும் அனைத்து சொத்துகளும் சமூகத்திற்கு உரிமையானதாக இருக்கும். பொதுவாக அத்தகைய அமைப்பு முறையினையே நாம் சோசலிசம் என்கிறோம். முதலாளித்துவத்தை ஆங்காங்கே மாற்றங்கள் செய்து சோசலிசத்தை அடைவது சாத்தியமற்றது. வரலாற்று அனுபவங்களோ விஞ்ஞானமோ அந்த கருத்திற்கு ஆதரவாக இல்லை. நவம்பர் புரட்சி செய்தது போல் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியின் ஒரே வீச்சின் மூலம் தற்போதய முதலாளித்துவ அமைப்பு முறையை உடைத்து நொறுக்குவதன் மூலம் மட்டுமே சமூகம் முழுமைக்குமான குணாம்ச ரீதியான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இதற்காக இன்று நாம் தொழிலாளி வர்க்கத்தை தயார்ப்படுத்த வேண்டும். மற்ற அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் உணர்வு பெற்றவர்களாக்கி அணிதிரட்டி தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து செல்லச் செய்ய வேண்டும். அதற்கு மக்களின் துன்பங்களுக்குக் காரணமான பல்வேறு பிரச்னைகளுக்காக அவர்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்துவதற்கு , அப்போராட்டங்களை தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகர வர்க்கப் போருடன் இறுதியாக இணைக்கும் திசைவழியில் முன்னெடுத்துச் செல்ல அவர்களோடு இருந்து அப்போராட்டங்களை வழி நடத்தவதற்கு நாம் மக்களிடம் செல்ல வேண்டும். இந்த அனைத்துக் கடமைகளையும் போதுமான அளவிற்கு திறம்பட செய்ய முடிந்தவர்களாக இருப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரக் கட்சியை கட்டியமைக்க வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாகும். மிகத் திறமையான படைத்தளபதியின் பாத்திரம் வகிக்கும் அத்தகையதொரு கட்சி இல்லாமல் தொழிலாளி வர்க்கப் புரட்சியை அதன் இறுதிவரை வழி நடத்திச் செல்லும் சிக்கலான பணி சாத்தியமற்றதாகும்.
நமக்கு முன்னுள்ள இம்முக்கியமான கடமைகளைப் புரிந்து கொள்ள முழுமனதோடு முயற்சிப்பதும் அக்கடமைகளை நிறைவேற்ற நம்மை மறுபடியும் அர்ப்பணித்துக் கொள்வதும் இக்காலகட்டத்தின் தேவையாகும்.
-தோழர்.சங்கர்சிங்
No comments:
Post a Comment