Powered By Blogger

Monday, December 20, 2010

எஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை






மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்
தருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான்.

முதலாளித்துவ ஜப்பானும், முதலாளித்துவமாகி வரும் சீனாவும் எதிர்கொள்ளவிருப்பவை நெருக்கடிகளே


சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி பொருளாதார வட்டாரங்களில் மிகமுக்கியமாகப் பேசப்படுகிறது. அதாவது சீனா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது என்பதே அச்செய்தி. குறிப்பாகப் பல்லாண்டு காலமாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கிய ஜப்பான் நாட்டைத் தாண்டியதாக சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது; அதாவது சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. அதே சமயத்தில் ஜப்பானின் வளர்ச்சியோ 2 சதவிகிதத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஏக்க நிலையிலேயே உள்ளது போன்றவை அதன் முக்கிய அம்சங்கள்.

விஞ்ஞான வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடும் முதலாளித்துவம்




கம்யூனிஸ்ட் அறிக்கையில் மாமேதை மார்க்ஸ் கூறினார் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும் அதை யொட்டிய தொலைத்தொடர்பு சாதனங்களின் முன்னேற்றத்திலும் முதலாளித்துவம் ஆற்றிய சாதனைகள் சமூகத்தின் முகத் தோற்றத்தையே மாற்றியது என்று. அவ்வாறு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியில் மாபெரும் பங்கினை ஆற்றிய முதலாளித்துவம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதைக் கூறினால் சராசரி மனநிலை உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.

நீண்டுகொண்டே போகும் இச்சகம் பாடுவோர் பட்டியல்... கல்விமானுக்குரிய கெளரவத்தை நிரூபித்தார் பேரா.கராசிமா



நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டு முக்கிய விசயங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று அதன் நிரந்தர அங்கங்களான போலீஸ், ராணுவம், நிர்வாகம், நீதி அமைப்பு ஆகியவற்றிற்கென்று தனித்தனி அலுவல்களை வகுத்துக் கொடுப்பது. இரண்டு அவற்றில் ஒன்றின் அதிகாரவட்டத்திற்குள் மற்றொன்று மூக்கை நுழைக்கக் கூடாது என்ற அடிப்படையைப் பேணிப் பராமரிப்பது. அதாவது அவற்றின் தனித்தனி அதிகாரங்களைப் பராமரிப்பது.

கிராமப்புற மாணவர் கல்வி மேம்பாடு என்ற இலக்கினை நோக்கி... இலக்கு இளைஞர் மன்றம் நடத்திய கருத்தரங்கம்



கடந்த ஜீலை 25 - ம் நாள் திருத்தங்கலுக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கூட்டம் கிராமத்தில் இலக்கு இளைஞர் மன்றத்தின் சார்பாக கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களோடு உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டி, மாணவர் ஜனநாயக இயக்கத் தோழர்களும் பெரிய எண்ணிக்கையில் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இலக்கு இளைஞர் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்வதிலும் அதனைச் சிறப்புற நடத்துவதிலும் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலிருந்து அவ்வட்டாரத்தில் கல்வி மேம்பாட்டிற்காகவும் அறிவுப் பரவலாக்கலுக்காகவும் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பொன்றினைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தார்.

சுயநிதி கல்லூரி முதலாளிகளுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள்


கல்வியாண்டில் ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் கல்வித்துறை தற்போது வேறொரு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. அதாவது இதற்குமேல் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட அகில இந்திய தொழில்நுட்ப கவின்சில் அனுமதி வழங்க கூடாது என்று கோரும் தீர்மானம் ஒன்றினை ஏ.ஐ.சி.டி.இ -க்கு அனுப்பியுள்ளது.

பீப்ளி (லைவ்): இந்திய சமூக அமைப்பின் இன்றைய அவலங்களைத் தோலுரிக்கும் அரிய படைப்பு



அங்கதம் (Satire) என்பது ஒரு இலக்கிய வடிவம். ஒன்றில் உள்ள மோசமான கோளாறுகளைக் கேலி செய்வதன் மூலம் அவற்றை மக்களின் புலனறிவுக்கு எட்டச் செய்து அதனைச் சரி செய்வதற்கான அல்லது அதற்கான எதிர்ப்பைத் திரட்டுவதற்காகப் பயன்படும் இலக்கிய வடிவம். கேலி செய்வது நகைச்சுவை அம்சத்தைக் கொண்டிருப்பதால் அது பார்ப்பதற்கும் அல்லது படிப்பதற்குமான ஈடுபாட்டைத் தூண்டக் கூடியதாக இருக்கும். அது எத்தனை முக்கியமான இலக்கிய வடிவம் என்றால் மாமேதை ஸ்டாலினே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 - வது கட்சிக் காங்கிரஸில் முன்வைத்த அவரது அறிக்கையில் சோவியத் சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக் கொணர்ந்து அவற்றின் தீர்விற்கு வழிகோல அங்கதம் போன்ற கலை இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்துங்கள் என கலை இலக்கியத் துறையிலிருந்து வந்து காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

சி.டபிள்யு.பி (CWP) யின் முதல் அமைப்பு மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்



நமது மாற்றுக்கருத்து இதழ் எந்த அமைப்பின் சார்பாக நடத்தப்படுகிறதோ அந்த உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி அமைப்பினை வழிநடத்தும் கண்ணோட்டத்தை வழங்கிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி) அதன் முதலாவது அமைப்பு மாநாட்டை நவம்பர் 19, 20, 21 தேதிகளில் மதுரையில் நடத்தவுள்ளது.சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியாவின் ஸ்தாபகத் தலைவர் தோழர் சிப்தாஷ் கோஷ் இணைந்து அந்த ஸ்தாபனத்தை நிறுவியவரும், அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகப் பலகாலம் விளங்கியவரும், என்று அக்கட்சி சிப்தாஷ் கோஷ் காட்டிய வழியிலிருந்து முற்றாக விலகிவிட்டது என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்தாரோ அன்று அதிலிருந்து விலகியதோடு, இந்தியாவில் உண்மையானதொரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் முயற்சி எஸ்.யு.சி.ஐயின்(SUCI) தோல்வியோடு முற்றுப் பெற்றுவிடவில்லை; அத்தகைய அமைப்பைத் தன்னோடு இணைந்து நிற்கும் தோழர்களைக் கொண்டு உருவாக்கிக் காட்டுவேன் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருபவருமான தோழர் சங்கர் சிங் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பிற்கு உருக்கொடுத்தார்.
எவ்வாறு சிப்தாஷ் கோஷ் இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைத் தவறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு அப்படிப்பினைகளின் அடிப்படையில் எஸ்.யு.சி.ஐ. கட்சியை உருவாக்கி அதன்மூலம் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாரோ அவ்வாறு அதே திசைவழியில் தோழர் சங்கர் சிங் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.பி.ஐ(எம்.எல்). மற்றும் எஸ்.யு.சி.ஐ. கட்சிகளின் அடிப்படைத் தவறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் முயற்சியில் தன் சக தோழர்களோடு இணைந்து ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.