Powered By Blogger

Saturday, September 1, 2012

தொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்


ஏனாம் ரெஜென்சி ஆலைத் தொழிலாளர்களின் இயக்கம் காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதலை எதிர்கொண்ட பின்னணியில் தொழிற்சங்க உரிமையைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் ஆளும்வர்க்க சக்திகளைக் கண்டித்து 26.02.2012 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரை  வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரிலுள்ள மணியம்மையார் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்.அ.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சம்பத், பத்திரிக்கையாளர் தோழர்.கருப்பன் சித்தார்த்தன், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர்.வி.வரதராஜ் ஆகியோரும் அக்கூட்டத்தில் உரையாற்றினர். உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தடுக்கப்படும் போக்கைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரம் ஆயிரக் கணக்கில் மதுரை நகரின் உழைப்பாளி மக்களிடையே இதனையயாட்டி வினியோகிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் கேள்வி கேட்பாரின்றித் தொடர்ந்து கொண்டுள்ள இந்நாளில் ஏனாம் நிகழ்வையும், அதுகுறித்து ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் மேற்கொள்ளும் துஷ்பிரச்சாரத்தையும், பொதுவாகவே தொழிற்சங்க உரிமை பல்வேறு பெயர்களில் தடுக்கப்படும் போக்கையும் அம்பலப்படுத்துவதாக சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அரங்கக் கூட்டம் அமைந்தது.

No comments:

Post a Comment