Saturday, September 1, 2012

தொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்


ஏனாம் ரெஜென்சி ஆலைத் தொழிலாளர்களின் இயக்கம் காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதலை எதிர்கொண்ட பின்னணியில் தொழிற்சங்க உரிமையைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் ஆளும்வர்க்க சக்திகளைக் கண்டித்து 26.02.2012 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரை  வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரிலுள்ள மணியம்மையார் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்.அ.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சம்பத், பத்திரிக்கையாளர் தோழர்.கருப்பன் சித்தார்த்தன், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர்.வி.வரதராஜ் ஆகியோரும் அக்கூட்டத்தில் உரையாற்றினர். உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தடுக்கப்படும் போக்கைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரம் ஆயிரக் கணக்கில் மதுரை நகரின் உழைப்பாளி மக்களிடையே இதனையயாட்டி வினியோகிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் கேள்வி கேட்பாரின்றித் தொடர்ந்து கொண்டுள்ள இந்நாளில் ஏனாம் நிகழ்வையும், அதுகுறித்து ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் மேற்கொள்ளும் துஷ்பிரச்சாரத்தையும், பொதுவாகவே தொழிற்சங்க உரிமை பல்வேறு பெயர்களில் தடுக்கப்படும் போக்கையும் அம்பலப்படுத்துவதாக சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அரங்கக் கூட்டம் அமைந்தது.

கூலி அடிமைத்தனத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - தோழர் ஆனந்தனின் மேதின உரைவீச்சு


திருத்தங்கல் நகரில் சி.டபிள்யு.பி-யின் மேதினப் பொதுக்கூட்டம்

இந்த ஆண்டு மேதினப் பொதுக்கூட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் 27.05.2012 அன்று மாலை நடைபெற்றது. அழகுற அமைக்கப்பட்டிருந்ததொரு மேடையில் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமை ஏற்றார். தோழர்கள் தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதன், கதிரேசன், சத்தியமூர்த்தி மற்றும் மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோர் அக்கூட்டத்தில் உரையாற்றினர்.

இறுதியில் சிறப்புரையாற்றிய சி.டபிள்யு.பி-யின் தென்இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தன் ஆற்றிய உரை சாராம்சத்தில் பின்வருமாறு இருந்தது.

தாராளவாதக் கொள்கையா, ஆளும் முதலாளி வர்க்கமா, யார் காரணம்?


இன்று இந்திய சமூகம் பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. தொழிலாளர்
, விவசாயிகள், மாணவர்கள் என்று சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் கடும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுள்ளனர். சமீப காலத்தில் ஊழல் நமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து உலெகெங்கும் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது.

தொழிலாளரைப் பொறுத்தவரையில் அவர்களது சம்பள விகிதங்கள் குறிப்பாகத் தனியார் துறையில் மிகப் பெருமளவு குறைந்துள்ளன. ஆலைகளை நடத்துவதற்கு ஆகும் மொத்த செலவில் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் வெறும் 10 சதவிகிதமே என்ற அளவிற்கு இதுவரை கண்டிராத விதத்தில் 2008ம் ஆண்டிற்குப் பிந்திய ஆண்டுகளில் குறைந்துள்ளன. அவர்களுக்கிருந்த வேலைப் பாதுகாப்புப் பறிபோயுள்ளது. சங்கம் அமைக்கும் உரிமையை அவர்கள் இழந்து நிற்கின்றனர். அனைத்துத் தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழில்முறை அமுலுக்கு வந்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு தனியார் உற்பத்தித் துறையில் தலைவிரித்தாடுகிறது.

கூலி அடிமைத்தனத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - தோழர் ஆனந்தனின் மேதின உரைவீச்சு


திருத்தங்கல் நகரில் சி.டபிள்யு.பி-யின் மேதினப் பொதுக்கூட்டம்

இந்த ஆண்டு மேதினப் பொதுக்கூட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் 27.05.2012 அன்று மாலை நடைபெற்றது. அழகுற அமைக்கப்பட்டிருந்ததொரு மேடையில் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமை ஏற்றார். தோழர்கள் தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதன், கதிரேசன், சத்தியமூர்த்தி மற்றும் மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோர் அக்கூட்டத்தில் உரையாற்றினர்.

இறுதியில் சிறப்புரையாற்றிய சி.டபிள்யு.பி-யின் தென்இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தன் ஆற்றிய உரை சாராம்சத்தில் பின்வருமாறு இருந்தது.

நேபாள அரசியல் நிகழ்வுகள் - ஒரு இயக்கவியல் பூர்வ ஆய்வு

நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு பல திருப்பங்கள் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளன. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-கள் தாங்கள் அதற்கு முன்பு நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் முழுவீச்சுடன் இறங்கியது அப்போராட்டத்தின் பரிமாணத்தையே மாற்றியது.

இலங்கை அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்திய அரசு காட்டிய தயக்கமும் - அதன் பின்னணியும்இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நான்காவது அலைவரிசையின் ஆவணப்படம் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை தமிழக மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அது போலியான ஆவணங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட படம் என்று எத்தனை கூறினாலும் அது அதனைப் பார்ப்பவர் மனதில் அதன் நம்பகத்தன்மையைப் பெருமளவு நிலைநாட்டவே செய்துள்ளது. இலங்கை அரசின் அப்பட்டமான பொய்கள், உண்மைகளை மூடிமறைக்கும் செயல்கள் அனைத்தும் அப்படத்தில் இடையூடாக வரும் உலக அளவில் அறியப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல் செய்திகளால் தெளிவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுச் செயலாளர் மில்லிபாண்ட் போன்றவர்களின் கூற்றுக்களும் இடைஇடையே அந்த ஆவணப் படத்தில் சேர்க்கப்பட்டு அதன் நம்பகத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்: சி.பி.ஐ(எம்) ன் சந்தர்ப்பவாத நிலைபாடும் ஜே.என்.யு-வின் எஸ்.எஃப்.ஐ. கிளை கலைப்பும்


நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதென்று இடதுசாரிக் கட்சிகளிலேயே பெரிய கட்சியாக விளங்கும் சி.பி.ஐ(எம்). கட்சி முடிவெடுத்துள்ளது. ஏறக்குறைய அனைத்து விசயங்களிலும் அக்கட்சியுடன் ஒத்துப்போய்க் கொண்டிருந்த சி.பி.ஐ. கட்சி தற்போது அதன் முந்தைய போக்கிலிருந்து மாறுபட்டு யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது.

நடுநிலைத் தன்மை

இத்தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா எந்த வகையிலும் பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி உடையவர் அல்ல என்று கூற முடியாது. விடுதலை பெற்ற காலம் தொடங்கி நமது நாட்டின் குடியரசுத் தலைவர்களாக அடுத்தடுத்து வந்த ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசைன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லோரும் அறிந்த விதத்தில் நடுநிலைத் தன்மை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த ஃபக்ருதீன் அலி அஹமத் காங்கிரஸின் முக்கியத் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவரும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நடுநிலைத் தன்மை கொண்டவராகவே இருந்தார்.

வழக்கு எண் 18/9 ஆர்ப்பாட்டமின்றி உள்ளத்தை உருக்கும் யதார்த்தமான சமூக விமர்சனம்


திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதும் நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைத் தனது திரைப்படத்திற்கு உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்ட இயக்குனரோடு நடந்த உரையாடலைச் சுவையோடு கூறிக்கொண்டிருந்தார்.

அவர் திரைப்படம் எழுத வேண்டியிருந்த திரைக்கதையில் பாத்திரங்களாக வரும் கதாநாயகனும் வில்லனும் ஒரே கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கிடையில் குணநலன்களில் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. என்னவோ கதாநாயகிக்கு கதாநாயகனைப் பிடிக்கிறது; மற்றவனைப் பிடிக்கவில்லை. உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட எனது நண்பருக்கு அவளுக்கு ஏன் கதாநாயகக் கல்லூரி மாணவனை மட்டும் பிடிக்கிறது. வில்லனாக வரும் கல்லூரி மாணவனை ஏன் பிடிக்கவில்லை என்பது புரியவில்லை.

மறுக்கப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை: கிரிமினல்களாகத் தொழிலாளர் சித்தரிக்கப்படும் கொடுமை


உலகமயப் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தொழில் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாறுதல்களில் மிக முக்கியமானது தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் போக்காகும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி புதிதாகத் தொடங்கப்படும் பிற தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்க உரிமை அப்பட்டமாக இன்று மறுக்கப்படுகிறது. அதை யொட்டிப் பல நிறுவனங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்களும் செயலிழந்தவையாகி விட்டன.

கூட்டு பேரம் ஒழிப்பு

அன்னிய மூலதனத்தின் வருகை, தொழில் வளர்ச்சி போன்ற முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பிய பேரிரைச்சல் தொழிற்சங்க உரிமை இழந்து கொடும் சுரண்டலில் அல்லல் பட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் குரலை வெளியில் வராதவாறு செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள் இல்லாததால் கூட்டு பேரமும் இல்லாமற் போய்விட்டது. அதனால் முதலாளிகள் நிர்ணயித்ததே ஊதியம் என்றாகி ஊதிய விகிதங்கள் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டன.

அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்


மிகக் குறைந்த கூலிக்கு உழைத்துக் கொடுத்து ஓடாய்த் தேயும் அச்சகத் தொழிலாளர் பிரச்னைகளை முன்னிறுத்தி கருத்தரங்கம் ஒன்று கடந்த 29.04.2012 அன்று மாலை 4 மணி முதல் 8.30 மணிவரை மதுரை நகரில் அச்சகத் தொழிலாளர் நிறைந்து வாழும் பகுதியான செல்லூரில் மகாலெட்சுமி மஹாலில் நடைபெற்றது. அச்சகத் தொழிலாளத் தோழர்கள் குமரன், பெருமாள், பாலமுருகன், நாகராஜன், கதிரவன் மற்றும் பாலா ஆகியோரின் சிறப்பான முன்முயற்சியினால் நடைபெற்ற அக்கருத்தரங்கத்தைக் கவிதை நடையில் தொகுத்து வழங்கி தோழர் கதிரவன் அதற்கு அழகு சேர்த்தார்.

சமயநல்லூரில் தியாகி பகத்சிங்கின் நினைவுதினக் கூட்டம்


25 மார்ச் 2012 ஞாயிறு அன்று சமயநல்லூர் தொலைத் தொடர்பு அலுவலகத்தை ஒட்டியுள்ள திடலில் பகத்சிங்கின் 81 வது நினைவு தினப் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. அத்தருணத்தில் சி.டபிள்யு.பியின் தென்னிந்தியப் பொதுச் செயலாளர் ஆனந்தன் பகத்சிங்கின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சமயநல்லூர்ப் பகுதி சி.டபிள்யு.பி. பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற நினைவுதினக் கூட்டத்தில் மற்ற பல தோழர்களோடு தோழர்கள் த.சிவக்குமார் (மாற்றுக்கருத்து ஆசிரியர்) மற்றும் வி.வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி) ஆகியோரும் உரையாற்றினர். தோழர்.ஆனந்தன் இறுதியில் சிறப்புமிக்கதொரு உரையினை ஆற்றினார். இடதுசாரி மனநிலை கொண்ட பொதுமக்களும் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சி.டபிள்யு.பி. தொண்டர்களும் திரளான எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் கம்யூனிஸக் கருத்துக்களை முதல்தரச் சிந்தனைத் தெளிவுடன் இந்திய மண்ணில் முன்வைத்த தியாகி.பகத்சிங்கின் கருத்துக்களை மக்கள் மனதில் பதிக்கும் சி.டபிள்யு.பி யின் அயராத முயற்சிக்கு உரிய பலன் கிட்டும் விதத்தில் அந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தேறியது.

தொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்


ஏனாம் ரெஜென்சி ஆலைத் தொழிலாளர்களின் இயக்கம் காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதலை எதிர்கொண்ட பின்னணியில் தொழிற்சங்க உரிமையைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் ஆளும்வர்க்க சக்திகளைக் கண்டித்து 26.02.2012 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரை  வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரிலுள்ள மணியம்மையார் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்.அ.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சம்பத், பத்திரிக்கையாளர் தோழர்.கருப்பன் சித்தார்த்தன், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர்.வி.வரதராஜ் ஆகியோரும் அக்கூட்டத்தில் உரையாற்றினர். உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தடுக்கப்படும் போக்கைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரம் ஆயிரக் கணக்கில் மதுரை நகரின் உழைப்பாளி மக்களிடையே இதனையயாட்டி வினியோகிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் கேள்வி கேட்பாரின்றித் தொடர்ந்து கொண்டுள்ள இந்நாளில் ஏனாம் நிகழ்வையும், அதுகுறித்து ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் மேற்கொள்ளும் துஷ்பிரச்சாரத்தையும், பொதுவாகவே தொழிற்சங்க உரிமை பல்வேறு பெயர்களில் தடுக்கப்படும் போக்கையும் அம்பலப்படுத்துவதாக சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அரங்கக் கூட்டம் அமைந்தது.

லெனினது உடலைப் புதைப்பதன் மூலம் கம்யூனிசத்தையும் புதைத்து விடலாம் எனக் கனவு காணும் புட்டின் கும்பல்


சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் மற்றும் எல்சின் கும்பலால் மேலைநாட்டு ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சிக்குப் பின்பு ஒன்றாயிருந்த சக்திவாய்ந்த சோவியத் யூனியன் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது. தங்களுக்குக் கிட்டியிருந்த உழைக்கும் வர்க்கத் தலைமையிலான அரசும் சுரண்டலற்ற ஆட்சியும் வழங்கிய பல்வேறு பலன்களை உணர்வுடன் பராமரிக்கத் தவறிய குற்றத்தைச் செய்ததற்காக அந்நாட்டின் மக்கள் அதன்மூலம் பெரும் விலையினைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி

சுதந்திரமே இல்லாமல் போன ஒரு நாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு இரையான அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் தற்போது புட்டின் தலைமையில் கொண்டுவரப் பட்டுள்ள ஆட்சிமுறை எத்தனை முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிமுறை என்பதைக் கண்ணுக்கு கண்ணாக கண்டு கொண்டுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, சோசலிச ஆட்சியின் கீழ் சமூக விரோதிகளாக விளங்கியவர்கள் மூலம் கொண்டுவரப் பட்டுள்ள கொலைகார முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாடப்பட்டுக் கெளரவமான வாழ்க்கையை இழந்த அந்நாட்டு மக்கள் இன்று முதலாளித்துவம் அறிமுகம் செய்துள்ள ஊழல், விபச்சாரம் போன்ற சமூகக் கேடுகளைக் குறைவின்றிப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அந்நாட்டின் எண்ணெய் வளத்தை மட்டும் மையமாக வைத்து இன்றும் அந்நாடு ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இருப்பதாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அந்த நாட்டின் உண்மையான வலு சமூக செல்வம் மக்கள் அனைவருக்கும் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டதில் தான் இருந்தது. அதில் ஏற்பட்ட பாதிப்பு அச்சமூகத்தை உள்ளீடாக ஒன்றுமில்லாததாக ஆக்கியுள்ளது.

தந்திரம்
இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக அந்நாடு மானசீகமாக எடுத்துவந்த நிலையையும் கடைப்பிடித்து வந்த போட்டியையும் அடிப்படையாக வைத்து ஒரு ரஷ்ய தேசிய உணர்வினை முன்னிலைப்படுத்தித் தந்திரமாக ஆட்சிக்கு வந்து அதனை நடத்தி வந்த புட்டினின் போக்கு இன்று எவரையும் ஏமாற்ற முடியாத ஒன்றாக அம்பலமாகி நிற்கிறது.

காற்றில் பறக்கவிடப்பட்ட கோட்பாடு
ஏதோ கோட்பாடு ரீதியான ஒரு கொள்கையைப் போல் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்க முடியாது என்ற நியதியை அவரே வகுத்துவிட்டு இரண்டுமுறை தான் இருந்த பின் பெயருக்கு மெட்வடோவ் என்பவரை ஒருமுறை குடியரசுத் தலைவராக வைத்திருந்த பின் மீண்டும் தானே குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டு தற்போது அப்பதவியை புட்டின் வகித்து வருகிறார்.

அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலும் அதற்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலும் மோசடித் தேர்தல்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் மூலமாக வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி அத்தேர்தலுக்கு எதிரான மகத்தான மக்கள் கிளர்ச்சிகளும் ரஷ்ய வீதிகளில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.

மகத்தான கிளர்ச்சிகள் பல ஏற்பட்டாலும் அந்த எதிர்ப்புணர்வைச் சமூகமாற்றச் சிந்தனையாக்கி இந்த முதலாளித்துவ தாசர்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற அங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சியும் வருந்தத்தகுந்த விதத்தில் முனைப்புடன் இல்லை.

மாற்று இல்லை எனக் காட்டும் போக்கு

அந்நாட்டின் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியோ மீளவே முடியாததாக ஆகிக் கொண்டுள்ளது. அந்நிலையில் முதலாளித்துவத்திற்கு மாற்று என்ற சிந்தனையே மக்கள் மனதில் வந்துவிடக் கூடாது என்பதில் உலக மூலதனமும் அதன் ஊதுகுழல்களும் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில் செஞ்சதுக்கத்தில் லெனின் மசோலியத்தில் வைக்கப்பட்டுள்ள லெனினது உடலைக் காண மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. லெனினது பொருத்தமான சீடரான ஸ்டாலினது பெயரை இருட்டடிப்புச் செய்யும் போக்கு குருச்சேவ் காலத்தில் தொடங்கி இன்றும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அது தோல்வி மேல் தோல்வியினைத் தழுவிக் கொண்டேயுள்ளது. கதிரவனின் ஒளியைக் கார் மேகங்கள் அவ்வப்போது தற்காலிகமாக மறைக்க முடியுமே தவிர நிரந்தரமாக மறைக்க முடியாது என்பது போல் ஸ்டாலினது பெயரும் ஒவ்வொரு பொது நிகழ்வின் போதும் அவரது உருவம் பொதிந்த பதாகைகளும் மக்கள் கரங்களில் அழகுற மென்மேலும் தவழ்ந்த வண்ணம் உள்ளன.

நேர்த்தியான பராமரிப்பு

உலகில் எந்தவொரு இறந்த மனிதரின் உடலும் இத்தனை நேர்த்தியாகப் பராமரிக்கப் பட்டதில்லை என்று கூறும் அளவிற்குப் பராமரிக்கப்பட்டு வரும் லெனினது உடல் சோவியத் விஞ்ஞானத்திற்கும் சான்று பகர்வதாகும். அதனை எப்படியாவது அகற்றிப் புதைத்துவிட வேண்டும் என்பது எதிர்ப் புரட்சிக் கும்பலின் நீண்ட நெடிய கால ஆசையாக இருந்த போதிலும் இதுவரை அத்தனை எளிதில் அதனை அதனால் செய்து முடிக்க முடியவில்லை.

அச்சூழ்நிலையில் மனிதகுல வரலாறு முதன்மைப்படுத்திய விதத்தில் ஒரு மாபெரும் புரட்சியாளன் முதல் முறையாகச் சுரண்டப்பட்ட வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றின் திருப்புமுனையைக் கொண்டு வந்தவன் என்ற அடிப்படையில் அவருக்குச் செல்ல வேண்டிய முக்கியத்துவத்தைத் திசைதிருப்பி அவர் ரஷ்ய நாட்டின் மாபெரும் தலைவர் என்ற வேறொரு முத்திரையைக் குத்தி அதனைத் தனக்குச் சாதகமாக்கிப் பராமரிக்க புட்டின் பலகாலம் முயன்றார்.

சராசரி ஜனநாயகமும் இல்லை

இன்று அவரது தந்திரங்கள் அனைத்தும் அம்பலமாகி அவர் மக்கள் விரோதத் தன்மைகள் பலவற்றைக் கொண்ட சுயலாப அரசியல்வாதி மட்டுமல்ல மோசடித் தேர்தல்கள் மூலம் பதவி சுகத்தைத் தொடர்ந்து நுகர விரும்பும் பதவிப் பித்தரும் ஆவார் என்பது அம்பலமாகியுள்ளது.
இதே சமயத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் பன்மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. எந்தவொரு முதலாளித்துவ நாட்டிலும் அனுமதிக்கப்படும் சராசரி ஜனநாயக உரிமைகள் கூட அங்கு மறுக்கப்பட்டு அவர் நடத்திய மோசடித் தேர்தலை எதிர்த்த போராட்டக்காரர்களின் வீடுகள் சோதனையிடப் படுவதும் அவ்வியக்கத் தலைவர்கள் நூற்றுக்கணக்கில் கைதாவதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

போலிக் கருத்துக் கணிப்பு

இச்சூழ்நிலையில் பீதியில் மிரண்டு போயிருக்கும் அவருக்கு உழைக்கும் மக்களின் போராட்ட உணர்விற்கு உந்து சக்தியாக இருந்து கொண்டிருக்கும் லெனினது பராமரிக்கப்பட்டு வரும் உடலை அகற்றுவது அவசர அவசியமாகியுள்ளது. அதன் விளைவாக அவர் ஒரு போலிக் கருத்துக் கணிப்பையும் நடத்தி பெரும்பான்மை ரஷ்ய மக்கள் லெனினது உடலை அகற்ற விரும்புவதாக ஒரு புள்ளி விபரத்தை வெளிவரச் செய்துள்ளார். ஆனால் அவர் நடத்திய கருத்துக் கணிப்பு மிகவும் போலியானது மற்றும் இட்டுக்கட்டப் பட்டது என்ற செய்தியும் அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவை ஒட்டியே வெளிவந்து மக்களிடம் பரவியுள்ளது.

மேலும் அவரது ஆட்சியை எதிர்த்த போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் லெனினது உடலை அகற்றுவது எரியும் தழலில் இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துவிடுமோ என்ற அச்சமும் ரஷ்ய நாட்டின் முதலாளிகளுக்கும் அவர்களது சேவகனான புட்டினுக்கும் அவரது கும்பலுக்கும் ஆழமாக உள்ளது.

எஜமான விசுவாசம்

இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் அவ்வப்போது லெனினது உடல் புதைக்கப்படப் போகிறது என்ற செய்தியைப் பரப்பி இந்திய முதலாளிகளின் பாலான அவர்களது எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. பாவம் அவர்களுக்குத் தெரியாது லெனினது உடலை அப்படியே புட்டின் கும்பல் புதைத்தாலும் ஒரு கம்யூனிஸ்ட்டின் உடலை அவர்களால் புதைக்க முடியுமே தவிர, கம்யூனிஸத்தைப் புதைக்க முடியாது என்று. இன்று முதலாளித்துவம் சிக்கித் தவிக்கும் மீள முடியாத நெருக்கடி கம்யூனிசக் கண்ணோட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டிக் கொண்டுள்ளது. இந்நிலையில் புட்டின் கும்பல் அவரது உடலைப் புதைக்கும் செயலைச் செய்தால் அது உழைக்கும் வர்க்க இயக்கத்தில் புது வேகத்தை நிச்சயம் பாய்ச்சும்.

வெண்மைப் புரட்சி: செவிலியர்கள் போராட்டம் தரும் புது உற்சாகம்


வொயிட் காலர் தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்பதைப் பொய்யாக்கி தங்கள் போராட்டத்தின் வாயிலாக உழைக்கும் மக்களுக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்துள்ளனர் செவிலியர்கள். 5 லட்சம் வரை செலவு செய்து செவிலியர் படிப்பை முடிக்கும் செவிலியர்கள், லட்சக் கணக்கில் நோயாளிகளிடம் பணத்தை வாங்கிக் குவிக்கும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ரூ. 3000 க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். வருடங்கள் கடந்தாலும் அவர்களின் ஊதியம் ரூ.7000 த்தைத் தாண்டுவதில்லை. இந்தக் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு வாங்கிய கல்விக் கடனை அடைக்கவும், ஏறியுள்ள விலைவாசியில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அல்லலுறுகின்றனர் செவிலியர்கள். அது மட்டுமல்லாமல் படிப்பிற்கான ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளும் நிர்வாகங்கள் வேலையைவிட்டு நிற்பதாகக் கூறினால் ரூ 50,000 செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் படி அவர்களை மிரட்டுகின்றன. 12மணி நேர வேலை, ஒ.டி. கிடையாது, நைட் சிஃப்ட் அலவன்ஸ் என்பது மிகவும் குறைவு, ஹாஸ்டல் கட்டணம் மிக அதிகம் என நிர்வாகம் செய்யும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள செவிலியர்கள் களம் இறங்கினார்கள். 

இலங்கை அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்திய அரசு காட்டிய தயக்கமும் - அதன் பின்னணியும்இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நான்காவது அலைவரிசையின் ஆவணப்படம் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை தமிழக மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அது போலியான ஆவணங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட படம் என்று எத்தனை கூறினாலும் அது அதனைப் பார்ப்பவர் மனதில் அதன் நம்பகத்தன்மையைப் பெருமளவு நிலைநாட்டவே செய்துள்ளது. இலங்கை அரசின் அப்பட்டமான பொய்கள், உண்மைகளை மூடிமறைக்கும் செயல்கள் அனைத்தும் அப்படத்தில் இடையூடாக வரும் உலக அளவில் அறியப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல் செய்திகளால் தெளிவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுச் செயலாளர் மில்லிபாண்ட் போன்றவர்களின் கூற்றுக்களும் இடைஇடையே அந்த ஆவணப் படத்தில் சேர்க்கப்பட்டு அதன் நம்பகத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.